வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட கண்டிஷன்.. இப்படியே போனால் ஹீரோக்களின் நிலைமை

கோலிவுட்டில் சிறந்த நடிப்பு திறமை கொண்ட தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேசும் ஒருவர். ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் திட்டம் இரண்டு, பூமிகா, சூழல் போன்ற OTT ரிலீஸ்களில் நடித்து வந்தார். இப்போது திரையுலகில் நயன்தாராக்கு இணையாக வர அவருடைய ரூட்டையே கையில் எடுத்து இருக்கிறார்.

பொதுவாக பெரிய ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்கள் காதல் காட்சிகளுக்காகவும், பாடல்களுக்காகவும் மட்டுமே தான் பயன்படுத்தப்படுவார்கள். எனினும் ஒரு சில ஹீரோயின்கள் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அப்படி நடிக்கும் நடிகைகள் தான் தங்களுக்கான ஒரு நிலையான இடத்தையும் பெற்று இருக்கிறார்கள்.

Also Read: விஜய் சேதுபதி கட்டுப்பாட்டிலிருக்கும் 3 நடிகைகள்.. 9 படங்களில் ஒன்றாக நடித்த அதிர்ஷ்டசாலி

கோலிவுட் நடிகைகளில் ஜோதிகா இப்படி ஒரு வியூகத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். பின்னாட்களில் அவரை தொடர்ந்து அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என ஒவ்வொருத்தராக இந்த ரூட்டுக்கு வந்தனர். இப்போது ஐஸ்வர்யா ராஜேசும் இந்த பிளானை தான் கையில் எடுத்து இருக்கிறார்.

அதாவது கதையில் இனி தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஐஸ்வர்யா. ஆரம்ப காலங்களிலேயே காக்கா முட்டை, கனா, தர்மதுரை, வடசென்னை என தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்கள் அனைத்துமே கதாநாயகிக்கு வெயிட் சேர்க்கும் கதைகள் தான்.

Also Read: நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசைப்படும் 5 நடிகைகள்.. திருமணத்திற்குப் பின்னும் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்

இதனை தொடர்ந்து டிரைவர் ஜமுனா, தீயவர் குலை நடுங்க, த கிரேட் இந்தியன் கிட்சன் என அடுத்தடுத்து உமன் ஓரியன்டேசன் கதைகளில் தான் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்தும் இது போன்றே கதைகளில் நடிக்க இருப்பதாகவும், கதாநாயகர்களுக்கு ஜோடி போடும் கேரக்டர்கள் எல்லாம் வேண்டாம் எனவும் முடிவு எடுத்துவிட்டாராம்.

இப்படி நன்றாக நடிக்கும் ஹீரோயின்ஸ் எல்லாம் மாஸ், கிளாஸ் என்று உமன் ஓரியன்டேசன் கதைகளை தேடி சென்று விடுகின்றனர். ஆனால் இது போன்ற கதைகள் எல்லாம் ஒரு சிலருக்கு தான் அமைகிறது. பலர் மீண்டும் பெரிய ஹீரோக்களின் கதைகளில் டூயட் பாட சென்று விடுகின்றனர்.

Also Read: சொல்லவே இல்லை.. ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவும், தாத்தாவும் பிரபல நடிகர்களா!

Trending News