Aishwarya Rajesh : பெரிதாக ஆடம்பரம் எதுவும் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல் எதார்த்தமான தோற்றத்தை உடையவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தனது திறமையால் மட்டுமே தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவை சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்
சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பல படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.
நியூயார்க் நகர் நடுவே ஐஸ்வர்யா
தமிழைப் பொறுத்தவரையில் மோகன்தாஸ், கருப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார். அஜயண்டே ரண்டம் மோஷனம் மற்றும் ஹெர் என்ற இரண்டு மலையாள படங்களும் ஐஸ்வர்யா கைவசம் இருக்கிறது.
வெயிலோடு விளையாடும் ஐஸ்வர்யா
அதேபோல் தெலுங்கிலும் ஐஸ்வர்யாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். மேலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
சைடு போசில் ஐஸ்வர்யா ராஜேஷ்
அந்த வகையில் இந்த விடுமுறையை அமெரிக்காவில் செலவிடும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மாடர்ன் சீமாட்டியாக நியூயார்க்கை சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் கலக்கல் புகைப்படங்கள்
- கவர்ச்சியை தூக்கலாக காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாய் அடைக்க வைக்கும் புகைப்படம்
- இப்படி ஒரு அழகான, இளமையான மினிஸ்டர் பார்த்தது இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.. உதயநிதி ரியாக்சன்?
- கிராமத்துக் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கிய 5 படங்கள்.. ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றிய டஸ்கி ஸ்கின் அழகி