தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவர் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் தன்னுடைய கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தெலுங்கு, மலையாளம் என்று கவனம் செலுத்து வரும் இவர் சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அதிலும் முக்கியமாக இவர் கொஞ்சம் திமிருடன் நடந்து கொள்வதாகவும் ஒரு சர்ச்சை இருக்கிறது.
Also read : ரிலீசுக்கு தயாரான ஐஸ்வர்யா ராஜேஷின் 4 படங்கள்.. நயன்தாரா இல்லாத இடத்தை நிரப்புறாங்க போல
ஏனென்றால் இவர் மேக்கப் மேன் ஒருவரை கைநீட்டி அடித்ததாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அது மட்டுமல்லாமல் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் கூட இவர் ஓவர் ஆட்டிடியூட் காட்டுவதாகவும் கூறுகின்றனர். இதனால் திரையுலகில் இவருக்கு இருந்த நல்ல பெயர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
அந்த வகையில் இவர் தற்போது மற்றும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது இவர் சமீப காலமாக நைட் பார்ட்டிக்கு அடிக்கடி சென்று வருகிறாராம். அங்கு அவர் ஒரு இளம் நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருவதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
Also read : நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட கண்டிஷன்.. இப்படியே போனால் ஹீரோக்களின் நிலைமை
அந்த இளம் நடிகர் வேறு யாரும் அல்ல பிகில், விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்த நடிகர் கதிர் தான். ஏற்கனவே திருமணமான இவருடன் தான் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் படு நெருக்கம் காட்டி வருகிறாராம். அவருடன் இவர் நைட் பாட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
கதிருடன் நைட் பார்ட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் உடைகளை அணிந்து வருவது ரசிகர்களை ஆச்சரியம் கொள்ள வைத்தது. இந்நிலையில் அவரின் நடவடிக்கைகளும் தற்போது மாறி போய் இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இவர் கதிருடன் இணைந்து சுழல் என்ற வெப் தொடரில் நடித்தார். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதாக ஒரு பேச்சு தற்போது பரவியுள்ளது.
Also read : சொல்லவே இல்லை.. ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவும், தாத்தாவும் பிரபல நடிகர்களா!