வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆதாரமில்லாமல் அவிழ்த்து விட்ட பயில்வான்.. ஒரே போட்டோவால் பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா

Aishwarya Rajinikanth: அண்மைக்காலமாகவே ரஜினி பற்றிய பல சர்ச்சையான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதிலும் பயில்வான் ரங்கநாதன் கொளுத்தி போட்ட ஒரு விஷயம் பூகம்பமாக வெடித்தது. ஆனால் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் அவருக்கு சரியான நோஸ்கட்டாக அமைந்திருக்கிறது.

அதாவது பயில்வான் ரங்கநாதன் சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார். அதாவது அவர் உதவி இயக்குனர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார்.

Also read: இவர் தேறவே மாட்டார் என ரஜினி நினைத்த நடிகர்.. 4 படங்களில் தலைவரை மிரட்டிய நடிப்பு சூறாவளி

அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா, ரஜினியிடம் இது குறித்து பேசியதாகவும், அந்த மன உளைச்சல் தாங்க முடியாமல் தான் அவர் மாலத்தீவுக்கு சென்றதாக ஒரு தகவலை கொளுத்தி போட்டார். மேலும் மகளால் ரஜினி நிம்மதி இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறினார்.

இது காட்டு தீ போல் பரவி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. அது மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் மன உளைச்சல் தாங்க முடியாமல் அடுத்து இமயமலைக்கு கிளம்ப போவதாக கூட சில செய்திகள் மீடியாவில் வெளிவந்தது. ஆனால் தற்போது அத்தனை வதந்திக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

Also read: ரஜினிக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. சூப்பர் ஸ்டார் பரபரப்பாக பேசிய 5 மேடைகள்

அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா, ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சமீபத்தில் தான் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

அதில் ரஜினி பேசிய பேச்சு இப்போது வரை பரப்பரப்பை உண்டுபடுத்தி வருகிறது. அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு தான் ஐஸ்வர்யா இந்த புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் எனக்கும் அப்பாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாமல் ஆதாரம் இல்லாமல் அவிழ்த்து விட்ட பயில்வானுக்கும் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா, ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

aishwarya-rajini
aishwarya-rajini

Trending News