புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேவலமான போஸ்டர் வெளியிட்டு அப்பாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. மார்க்கெட்டை கொறச்சுடாதீங்க அம்மணி

பட இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனின் போஸ்டர் வெளிவந்த நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பெரியதளவு பேசப்பட்டு வருகிறது.

மேலும் சுபாஸ்கரனின் லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கெஸ்ட் ரோலில் வருவதாக அறிவிப்பு வெளிவந்தது. அதன் பின் தற்போது அவரின் கதாபாத்திரமான மொய்தீன் பாயின் புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: ரஜினியால் படாதபாடு படும் ரோஜா.. பொது இடத்தில் முத்தமிட்டதால் கிளம்பிய அடுத்த சர்ச்சை

மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழ ஆரம்பித்துவிட்டது.

போஸ்டரில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் போல ரஜினி காணப்படுவதால் மதச்சம்பந்தமான கருத்தை முன் வைக்கும் விதமாக அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இவரின் உடை இருமதத்தினரிடையே ஏற்படும் பிரச்சனையை சமாதானம் செய்வது போன்று அமைந்திருக்கின்றது.

Also Read: சிங்கம் போல் கர்ஜிக்க தயாரான சூப்பர் ஸ்டார்.. தோல்வி பயத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு

அதிலும் போஸ்டரின் பின்புறத்தில் காணப்படும் கலவர பூமி பாம்பே படத்தில் தோன்றிய காட்சிகளை நினைவுபடுத்துவது போன்று அமைந்திருக்கிறது. மேலும் ரஜினி பாம்பேவை தன் வசப்படுத்தியது போன்றும் காட்சி அமைந்திருக்கிறது.

போஸ்டர் வெளியிட்டு அப்பாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா

lal salam
lal salam

இப்போஸ்டரின் இத்தகைய தோற்றம் 80ல் வெளிவந்த பாட்ஷா படத்தின் புரட்சியாக இருக்குமோ என்ற கேள்வியை முன்வைக்கின்றது. மேலும் சிலர் சொந்த மகளே இவ்வாறு தன் தந்தையின் இமேஜை கெடுப்பது போல போஸ்டர் அமைந்திருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: அடுத்தடுத்து திரை உலக மரணங்களா.? சரத்பாபு இறந்ததாக கிளம்பிய புரளி, ஷாக் ஆன ரஜினி

Trending News