வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

100 கோடி பட்ஜெட்.. 12 கோடி வசூல்.. Flop-இல் நடந்த மிகப்பெரிய Flop இதுதான்.. ஆனா OTT-இல் ட்ரெண்டிங்

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ஒன்று தியேட்டர்களில் ரூ.12 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்து படு தோல்வியடைந்தது. ஆனால் OTT-யில் இந்த படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது. நல்ல படத்தை மக்கள் ஒரு சில நேரம் இப்படி கொண்டாட தவறி விடுகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரோன் மே கஹான் தம் தா என்ற படம் தியேட்டர்களில் வெளிவந்தது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், தபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியிருந்தது. தியேட்டர் ரிலீஸில் இந்த படம் ரூ.12.91 கோடி மட்டுமே வசூலித்ததால் தயாரிப்பாளர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் உடைந்து போனார் அஜய் தேவ்கன். ஆனால் இந்த படம் OTT-யில் வெளியான பின்பு நடந்த கதையே வேறு. எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இந்த படத்தை OTT-யில் ரிலீஸ் செய்யும்போது, இந்த படம் அதிக பார்வையை பெற்றுள்ளது.

செப்டம்பர் 27 அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. முன்பு இது வாடகைக்குக் கிடைத்தது. ஆனால் இப்போது சந்தா அடிப்படையிலான பயனர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படம் வெளியான உடனேயே பிரபலமானது. இது தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

காதலை மய்யமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதை பார்த்த பின்னர், அப்றம் ஏன் தியேட்டரில் மட்டும் ஓடவில்லை என்று குழம்பியுள்ளனர். முன்னதாக இந்த படத்தின் கதை குறித்து நடிகர் அஜய் தேவ்கன் சந்தேகம் வெளியிட்டிருந்தார். இயக்குனரின் வற்புறுத்தலின்பேரில் இந்த படத்தில் நடித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது வரவேற்பு பெற்ற பிறகு அவர் இதை பற்றி எதுவுமே பேசவில்லை. சில நேரங்களில் இப்படி தான் நல்ல படத்திற்கு அப்போது வரவேற்பு கொடுக்காமல் பின்னர் கொண்டாடுவார்கள். இந்த கலாச்சாரம் மாறினால் மட்டுமே இந்திய படங்கள் உலக படங்கள் ரேஞ்சுக்கு வளரும்.

Trending News