போனி கபூரை விட வெறியுடன் காத்திருக்கும் அஜித்.. 8 வருடங்களுக்குப் பின் நேருக்கு நேர் மோதும் சம்பவம்

தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சொல்லப்போனால் சோசியல் மீடியாவில் இவர்களின் ரசிகர்களுக்கு எந்த நடிகர் பெரியவர் என எப்போதும் காரசாரமான வாக்குவாதமும், சண்டைகளும் பற்றி எரியும்.

இருவரின் படங்களும் தனித்தனியாக வெளியானாலே சோசியல் மீடியா ரணகளமாக இருக்கும். இதில் ஒரே நாளில் இவர்களின் படங்கள் மோதினால் சொல்லவா வேண்டும். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது 8 வருடங்கள் கழித்து நடக்க இருக்கிறது. இதற்கு முன்பு எத்தனையோ முறை விஜய், அஜித் இருவரின் படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதி இருக்கிறது.

Also read : அஜித்திற்காக விட்டுக்கொடுத்த விஜய்.. இப்படிப்பட்ட மனசு யாருக்கு வரும்

ஆனால் கடந்த எட்டு வருடங்களாக இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் படங்கள் நேருக்கு நேர் மோதியது. அந்த வகையில் விஜய்யின் ஜில்லா திரைப்படமும், அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கலெக்ஷனை பொருத்தவரை வீரம் திரைப்படம் தான் முன்னணியில் இருந்தது.

அதன் பிறகு இருவரின் திரைப்படங்களும் மோதாத நிலையில் தற்போது அஜித் தான் வாரிசு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் துணிவு திரைப்படத்தையும் வெளியிட வற்புறுத்தி இருக்கிறார். தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அதை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். அதேபோன்று அஜித் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also read : அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

பல மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த படத்தின் சூட்டிங் இன்னும் முடியாமல் இருக்கின்றது. அதனால் இப்படம் பொங்கலுக்கு வெளிவருவது கஷ்டம் என்றே பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் தான் அஜித் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட்டே ஆக வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம். ஏனென்றால் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பொருத்தவரையில் விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

அதை இந்த முறை உடைத்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அஜித் இவ்வளவு தீவிரம் காட்டுகிறார் என்றும் திரையுலகில் கூறி வருகின்றனர். மேலும் படம் வரவேற்பு பெறுகிறதோ இல்லையோ விஜய் படத்தின் கலெக்ஷன் கணிசமாக குறையும் என்பதுதான் அஜித்தின் திட்டமாம். ஏனென்றால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் எதிர்பார்த்தபடி வாரிசு படத்தின் வசூல் குறையும் என்று தான் அவர் இப்படி ஒரு ஆர்டரை பட குழுவுக்கு போட்டு இருக்கிறார்.

Also read : விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!