ஆதிக்கின் ஃபேன் பாய் சம்பவம் எப்படி இருக்கு.? வெளிவந்த குட் பேட் அக்லி முதல் விமர்சனம்

Good Bad Ugly: அஜித் வெறியரான ஆதிக் ரவிச்சந்திரன் அவரை வைத்து குட் பேட் அக்லி படத்தை எடுத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம் விடாமுயற்சி படத்திற்கு வழிவிட்டது.

அதைத்தொடர்ந்து ஏப்ரல் 10 ஆம் தேதி சோலோவாக வெளியாகிறது. இதற்கான ப்ரமோஷன் வேலைகள் இப்போது சூடு பிடித்துள்ளது.

திரிஷா, பிரசன்னா, சுனில் என பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

வெளிவந்த குட் பேட் அக்லி முதல் விமர்சனம்

அதேபோல் டீசர் வேற லெவல் சம்பவம் செய்தது. இன்னும் சில தினங்களில் ட்ரைலரை வெளியிடுவதற்கும் படக்குழு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் படம் பற்றிய முதல் விமர்சனம் கசிந்துள்ளது. அதன்படி படத்தை ஓவர்சீஸ் ரிலீசுக்கு அனுப்புவதற்கான சென்சார் தற்போது முடிந்துள்ளது.

அதைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் எனவும் பாராட்டி உள்ளனர்.

அதேபோல் எந்த இடத்திலும் கட் செய்யாமல் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுத்திருக்கின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் ஆதிக் ஃபேன் பாய் சம்பவம் செய்திருக்கிறார் என தெரிகிறது.

ஏற்கனவே ரசிகர்கள் படத்திற்காக மரண வெய்ட்டிங்கில் உள்ளனர். அதில் இந்த தகவலும் கசிந்துள்ள நிலையில் தியேட்டரை தெறிக்க விட இப்போதே தயாராகிவிட்டனர்.