செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

6 முறை பொங்கலன்று மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் படங்கள்.. யாருக்கு அதிக வெற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் கிட்டதட்ட 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி தென்னிந்திய சினிமா ரசிகர்களை தங்களது கைகளில் கட்டிப் போட்டு உள்ளனர். இதனிடையே இவர்களது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தீபாவளி, பொங்கல், புதுவருடம் என ஒரே நாளில் தல, தளபதி திரைப்படங்கள் ரிலீஸாகி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளனர். அப்படி பொங்கல் திருநாளன்று ரிலீஸ் செய்யப்பட்ட தல, தளபதி திரைப்படங்களில் யாருடைய திரைப்படம் அதிகமாக வெற்றியடைந்தது, தோல்வி அடைந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் வான்மதி: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படமும், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வான்மதி திரைப்படமும் 1996ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸான முதல் தல-தளபதி திரைப்படமாகும். இதில் அஜித்தின் வான்மதி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படம் அந்த ஆண்டின் பொங்கலின் வெற்றித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.

Also Read :அடிமாட்டு விலைக்கு நடந்த வியாபாரம்.. ஆஸ்தான தயாரிப்பாளரை வைத்து காய் நகர்த்திய விஜய்

காலமெல்லாம் காத்திருப்பேன் மற்றும் நேசம்: நடிகர் அஜித்தின் நேசம் திரைப்படம் 1997ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீசாகி தோல்வியடைந்த நிலையில் விஜய்யின் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. 30 லட்சம் வரை இப்படத்தின் பட்ஜெட் அமைந்த நிலையில், 50 லட்சம் வரை இத்திரைப்படம் வசூல் கொடுத்தது.

பிரண்ட்ஸ் மற்றும் தீனா: 2001 ஆம் ஆண்டு ரிலீசான விஜயின் ப்ரண்ட்ஸ் திரைப்படமும் அஜித்தின் தீனா திரைப்படமும் சக்கை போடு போட்டது. பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜயின் நடிப்புக்கும் வடிவேலுவின் காமெடிக்கும் அத்திரைப்படம் திரையரங்கில் கலகலப்பாக ஓடியது. அதேநேரத்தில் அஜித்தின் தீனா திரைப்படத்தில் அடிதடி கதைக்களத்துடன் திரையரங்கில் பட்டையை கிளப்பியது. இரு திரைப்படங்களும் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய திரைப்படங்களாகும்.

ஆதி மற்றும் பரமசிவம்: 2006 ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியான அஜித்தின் பரமசிவம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. ஆனால் விஜய்யின் ஆதி திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் ரீமேக் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read :தளபதி 67 படத்தில் சம்பளத்தை குறைத்த விஜய்.. பின்னால் இருக்கும் காரணம்

போக்கிரி மற்றும் ஆழ்வார்: 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியான விஜய்யின் போக்கிரி திரைப்படம் அந்த ஆண்டின் போக்கிரி பொங்கலாக சக்கை போடு போட்டது. பிரபுதேவா இயக்கிய இத்திரைப்படத்தில் விஜயின் நடிப்புக்கும், நடனத்திற்கும் ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். ஆனால் அஜீத்தின் ஆழ்வார் திரைப்படம் அந்த ஆண்டு தோல்வி திரைப்படமாக அமைந்தது.

ஜில்லா மற்றும் வீரம்: 2014ஆம் ஆண்டு ரிலீசான அஜித்தின் வீரம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது சிறுத்தை சிவாவின் இயக்கமும், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையும் இப்படத்திற்கு மாஸ் ஹிட் கொடுத்தது. அதே சமயத்தில் விஜய்யின் ஜில்லா திரைப்படம் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும் இத்திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் வீரம் திரைப்படத்தை காட்டிலும் ஜில்லா படம் சற்று தோல்வியை சந்தித்தது.

இதுவரை 6 முறை அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் பொங்கலன்று ரிலீசாகி போட்டி போட்டது. இதில் 3 அஜித் திரைப்படங்களும், 3 விஜய் திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே எட்டு வருடங்கள் கழித்து வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read :அஜித், விஜய், விக்ரம் என கலக்கிய இயக்குனர்.. ஒரு வெற்றிப் படத்திற்காக 15 வருடம் போராடும் அவலம்

Trending News