செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

AK62 மூச்சு பேச்சு காணும்.. இதுல அடுத்த படத்திற்காக 4 இயக்குனரிடம் கதை கேட்ட அஜித்

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகே 62 படம் மிகப்பெரிய குழப்பத்திலேயே இருந்து வந்தது. முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்று தெரிவித்த நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து இவர் நீக்கப்பட்டார். அதன் பின் ஏகே 62 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கப் போவதாக பெயர் அடிபட்டது.

பின்பு கடைசியாக மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதற்கான படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் இது குறித்து ஒரு அப்டேட்டுகளும் வெளிவராமல் இருக்கிறது. இதற்கிடையில் அஜித்தின் அப்பா காலமானதால் அவர் கொஞ்சம் மௌனம் காத்து வருகிறார்.

Also read: அஜித் மாதிரி நடிகர்களுடன் நடிக்கும் போது மூளைய கழட்டி வச்சிடுவேன்.. பரபரப்பை கிளப்பிய வில்லன்

இந்நிலையில் ஏகே 62 மூச்சு பேச்சு இல்லாத நிலையில் அஜித் அடுத்த படத்திற்காக நான்கு இயக்குனரிடம் கதை கேட்டு வருகிறார். அதன்படி விக்ரம் வேதா படத்தை எடுத்த புஷ்கர் காயத்ரி இடம் முதலாவதாக அஜித் கதை கேட்டிருக்கிறார். இந்த இயக்குனர் ஒரு டான் கதையை கூறி இருப்பதாக தகவல்கள் வருகிறது.

அடுத்ததாக ஒரு திரில்லர் பாணியில் கார்த்திக் நரேன் ஒரு கதையை ரெடி செய்து அஜித்திடம் கூறியிருக்கிறார். அத்துடன் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆக்சன் திரில்லர் கதை ஒன்றை அஜித்திற்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துப் போனதால் இதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

Also read: காரணத்தோடு வெளிவந்த 6 லவ் அண்ட் பிரேக்கப்ஸ்.. அஜித்தை விரட்டி விட்ட காதலியின் அம்மா

இது மட்டுமில்லாமல் மாயா இயக்குனர் அஸ்வினிடமும் அஜித் கதை கேட்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து கதையை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அஜித் எப்பொழுதுதான் ஏகே62 படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பிப்பார் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம் துணிவு படத்தின் வெற்றிதான். ஏனென்றால் அவர் அந்த படத்தின் மூலம் அதிகமான வெற்றியை பார்த்ததால் அடுத்த படத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கவனமாக செய்து வருகிறார். ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு ரொம்பவுமே இழுத்தடித்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

Also read: முத்து படம் இல்லையென்றால் அஜித் இல்லை.. 27 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த ஏகேவின் வெற்றி ரகசியம்

Trending News