செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பழம் நழுவி பாலில் விழுந்தும் பிரயோஜனம் இல்ல.. நடிக்க மறுத்தவரை ஒத்த போனில் கூட்டிட்டு வந்த அஜித்

Actor Ajith: மாத கணக்கில் இழுத்தடித்து வந்த விடாமுயற்சி இப்போது ஒரு வழியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் இதன் ஷூட்டிங் இப்போது வெளிநாட்டில் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிக்க மறுத்த ஒரு நடிகரை ஒரே போன் காலில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார் அஜித்.

ஆனாலும் அது பிரயோஜனம் இல்லாமல் போயிருக்கிறது. அந்த வகையில் விடாமுயற்சியை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தபோது சந்தானத்தையும் அதில் நடிக்க வைக்க பேசி இருக்கின்றனர். ஆனால் ஹீரோவான பிறகு அவர் காமெடி கேரக்டர்களிலோ மற்ற ஹீரோக்களின் படங்களிலோ நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இத்தனைக்கும் அவருடைய பல படங்கள் தோல்வியை கண்டது. ஆனாலும் அவர் தன் முடிவில் உறுதியாக தான் இருந்தார். அதனால் விக்னேஷ் சிவனுக்கும் இதுதான் பதிலாக கிடைத்திருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் நேரடியாக சந்தானத்திற்கு போன் செய்து இது குறித்து பேசி இருக்கிறார்.

அதன் பிறகும் சந்தானம் மறுப்பாரா என்ன, உடனே அஜித்துக்காக இதில் நடிக்க சம்மதம் கூறியிருக்கிறார். இருந்தும் என்ன பிரயோஜனம் இயக்குனரே மாற்றப்பட்ட நிலையில் கதையிலும் ட்விஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது. சந்தானமும் டிடி ரிட்டன்ஸ் படத்தில் பிஸியாகிவிட்டார். இப்படி பழம் நழுவி பாலில் விழுந்தும் வீணாக போயிருக்கிறது.

விக்னேஷ் சிவன் மட்டும் மாற்றப்படாமல் இருந்தால் நிச்சயம் அஜித், சந்தானத்தின் கூட்டணியை நாம் திரையில் கண்டு ரசித்திருக்கலாம். இருப்பினும் சந்தானம் இப்போது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டுகளில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துள்ளதாகவும் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

அதனால் விரைவில் இவரை வேறு ஹீரோக்களின் படங்களில் நாம் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஆர்யாவுக்காக நான் காமெடி கேரக்டரில் நடிப்பேன் என்று சந்தானம் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் அஜித்துக்காகவும் ஓகே சொல்லி இருப்பது புதிய தகவலாக தான் இருக்கிறது.

Trending News