வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு வழியாக மொத்த ஸ்கிரிப்ட்டை உறுதி செய்த அஜித்.. சொன்ன மாதிரி ரிலீஸ் தேதியை லாக் செய்த மகிழ் திருமேனி

Vidamuyarchi Movie Updated:கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு பிறகு அடுத்ததாக அவர் விடாமுயற்சி என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது, ஆனால் பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலக்கப்பட்டார்.

 அதன் பிறகு இப்போது அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்ல படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பிட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Also Read: விடாமுயற்சி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. வேற லெவலில் இருக்கும் நியூ லுக்

படத்திற்கு  நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என பலமுறை சொல்லப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிக் கொண்டே போகிறது. ஆனால் இப்போது விசாரித்துப் பார்த்ததில் இந்த மாதம் விடாமுயற்சியின் படப்பிடிப்பு துவங்குவது உறுதியாகிவிட்டது.

அது மட்டுமல்ல இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் என்ன என்பதை தெரியாமல் இருந்த நிலையில், ஒரு வழியாக அஜித் விடாமுயற்சி படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் ஸ்க்ரீன் பிளேவையும் லாக் செய்து இருக்கிறார். நிச்சயம் இந்த படம் மகிழ் திருமேனியின் ஸ்டைலில் ஆக்சன் கலந்த திரில்லர் படமாக இருக்கப் போகிறது.

Also Read: இப்படியே போனா வேலைக்கு ஆகாது.. அடுத்தடுத்த 2 படங்களின் இயக்குனர்களை அறிமுகம் செய்யும் அஜித்

அதற்காக அஜித்தும் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும்கொடுக்க தயாராகி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்று செட்யூலாக பிளான் போட்டு இருக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது 

படத்தை சில மாதங்களிலேயே முடித்துவிட்டு வரும்  2024ம் ஆண்டு சம்மருக்கு அஜித் சொன்னபடி ரிலீஸ் செய்ய பக்கா பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில தினத்தில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு துவங்குவது உறுதியாகிவிட்டது.

Also Read: விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!

Trending News