Ajith Daughter’s Latest Photo: ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய அஜித், ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். அவர்களின் போட்டோக்கள் அவ்வப்போது மீடியாவில் வெளியாகி வைரலாகும்.
அதன்படி தற்போது அஜித் மகளின் லேட்டஸ்ட் போட்டோ ட்ரண்ட் ஆகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதைத்தான் அஜித்தின் ரசிகர்கள் இப்போது ஷேர் செய்து வருகின்றனர்.
Also read: விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்
கடந்த 2000ம் ஆண்டு அஜித், ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதை அடுத்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி அனோஷ்கா பிறந்தார். அந்த வகையில் தற்போது 16 வயதாகி இருக்கும் அவர் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ஷாலினியை மிஞ்சிய அனோஷ்கா

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஷாலினியை மிஞ்சும் அழகில் இருக்கிறாரே என வியந்து வருகின்றனர். அந்த அளவுக்கு அனோஷ்கா ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். அவருடைய உடையும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் விதமும் எதிர்காலத்தில் இவர் ஹீரோயின் ஆவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
குடும்பத்துடன் அஜித்

Also read: நீங்க நேர்ல வரலனாலும் பரவாயில்லை, கொஞ்சம் அடக்கி வாசிங்க.. அஜித்துக்கு வலுக்கும் கண்டனங்கள்
தற்போது அஜித் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தன் குடும்பத்துடன் துபாயில் இருக்கிறார். அங்கு அவர் பார்ட்டிகளில் கலந்து கொண்ட வீடியோக்கள் வைரலானது. அதைத்தொடர்ந்து இப்போது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. மேலும் அனோஷ்காவின் பிறந்த நாளுக்காக அஜித் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் அஜித்
