புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இப்படியும் ஒரு மனுசனா.? GOAT படம் இப்படி தான் இருக்கணும், வெங்கட் பிரபுவை உற்சாகப்படுத்திய விநாயக்

Ajith Kumar: அண்ணன் எப்போ எந்திரிப்பான் தின்னை எப்போ காலி ஆகும்னு எல்லா இடத்திலும் ஒரு ஆள் காத்திருப்பாங்க. அதிலும் சினிமா துறையில் இந்த விஷயம் அதிகமாகவே நடக்கும். ஒரு நடிகரின் மார்க்கெட் சரிவு இன்னொரு நடிகருக்கு ஆதாயம் ஆகிவிடும்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய சமகாலத்து போட்டியாளரான விஜய் படத்தை பற்றி அஜித் பேசி இருக்கும் விஷயம் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமாவை பொருத்தவரைக்கும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் போட்டி தான் பல வருட காலமாக தமிழ் சினிமா பொருளாதாரத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த போட்டி தான் இந்த இரண்டு நடிகர்களின் சம்பளத்தை கூட நிர்ணயிக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்பது அஜித்திற்கு பெரிய ஆதாயம்தான். விஜய் சினிமாவில் இருந்து விலகி விட்டால் அஜித்துக்கு சினிமாவில் போட்டி என்பதே இருக்காது.

இதனால் அஜித், விஜய் சினிமாவை விட்டு வெளியேறுவதை கொண்டாடுவார் என்று தான் பல மீடியாக்களும் பேசியது. ஆனால் ஒரு நடிகன், பணம் என்பதை தாண்டி அஜித் தன்னை ஒரு பெரிய மனிதனாக நிரூபித்து இருக்கிறார்.

வெங்கட் பிரபுவை உற்சாகப்படுத்திய விநாயக்

மங்காத்தா படத்தில் இருந்து அஜித் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. உண்மையை சொல்ல போனால் அஜித் பட இயக்குனர் வெங்கட் பிரபு எப்படி விஜய் வைத்து படம் இயக்க முடிவெடுத்தார் என எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள்.

அஜித் பட இயக்குனர் என்றெல்லாம் எனக்கு பாகுபாடு இல்லை என்பதை விஜய் தெளிவாக GOAT படத்தின் மூலம் காட்டிவிட்டார். அதேபோன்று வெங்கட் பிரபு விஜய் வைத்து படம் இயக்கப் போவதை அஜித்திடம் சொல்லி இருக்கிறார்.

அதற்கு வாழ்த்து தெரிவித்த அஜித் மங்காத்தா படத்தை விட 100 சதவீதம் இந்த படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

இணையதளத்தில் ஒரு சின்ன போஸ்ட் போட்டு ரசிகர்களை தூண்டிவிட்டு தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் சின்ன சின்ன ஹீரோக்களுக்கு மத்தியில், அஜித் இப்படி ஒரு விஷயம் செய்திருப்பது எல்லோருக்குமே ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Trending News