வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய் செயலால் மரியாதை இல்லைன்னு எஸ்கேப் ஆன அஜித்.. ரஜினியை ஃபாலோ பண்ணும் ஏகே

Ajith and Vijay film latest update: தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக விளங்கும் தல, தளபதி இருவரும் விஜய் 68 மற்றும் அஜித் “விடாமுயற்சி” என பிசியாக இருந்து வருகின்றனர். திரையில் இவர்களின் படங்கள் மோதிக் கொள்கின்ற  வேளைகளில் ரசிகர்களும் மோதிக் கொள்வது வாடிக்கையான ஒன்று.

படப்பிடிப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது பிரியாணி பரிமாறுவது என்று அடிக்கடி தங்களது பிரண்ட்ஷிப்பை நிரூபித்துக் கொள்வார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 68 ம்  மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சியும் ரெடியாகி வருகிறது.

நீண்ட போராட்டத்திற்கு பின் விடாமுயற்சி படக் குழு அஜர்பைஜானில் தங்களது படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறது. விஜய் 68 படப்பிடிப்பு ஜப்பானில் நடக்க இருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை அஜித்தின் விடாமுயற்சி நடக்கும் அஜர்பைஜானுக்கு மாற்றியுள்ளனர்.

Also Read: அஜித்துக்கு போன் போட சொன்ன விஜய்.. அரசியலை ஆட்டம் காண வைக்க போகும் சம்பவம்

இதனால் கடுப்பான அஜித், அஜர்பைஜானில் படப்பிடிப்பை வேகமாக முடித்த கையோடு துபாயில் சூட் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். விடாமுயற்சி படக் குழுவினரும் மூட்டை முடிச்ச கட்டி கிளம்பி உள்ளனர். ரஜினி வரும்போது விஜய் எப்படி பண்ணாரோ அது மாதிரி அஜித் இப்போது பண்ணுகிறார் என திரை உலகில் நம்பத்தக்க வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

ஒரு கோணத்தில் பார்க்கும்போது ரசிகர்களை முட்டாள் ஆக்குவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. எப்போதும் போல் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்து வெளியிட்டார்கள் என்றால் பிரச்சனை முடிந்து விடும் ஆனால் அதைத்தான் செய்ய மாட்டேன் என்கிறார்களே.

Also Read: பொல்லாததை சொல்லி அஜித் படத்தில் நடிக்க போட்ட தடை.. 15 வருடத்திற்கு பின் கிரஷ் நடிகர் சொல்லிய உண்மை

Trending News