புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வித்தியாசமாக ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்திய அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரொமான்ஸ்

கோலிவுட்டின் எவர்கிரீன் நட்சத்திர தம்பதியர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித்- ஷாலினி இருவருக்கும் இப்போது வரை எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல், ரசிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஜித், ஷாலினிடம் எப்படி தன்னுடைய காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தினார் என்ற தகவல் வெளியாகி தல ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, அதன் பிறகு 90களில் விஜய்யுடன் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார். அதன்பின் அஜித்துடன் அமர்க்களம், மாதவன் உடன் அலைபாயுதே போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பெருமைக்குரியவர்.

Also Read: அஜித் செய்த உதவி.. நன்றி கடனாக பெண்ணின் கணவர் செய்த காரியம்

இவர் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக தற்போது வரை தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

அமர்க்களம் படத்தில் தான் அஜித்- ஷாலினி இருவரும் காதலித்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அமர்க்களம் படத்தில் முதலில் நடிக்க மறுத்த ஷாலினியை அஜித்தான் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பல கண்டிஷனை போட்டு தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.

Also Read: தந்தையை தொடர்ந்து அஜித்தின் நண்பருக்கு நேர்ந்த சோகம்.. கவலையில் உறைந்து போயுள்ள ஏகே

“நோ கிளாமர்” என்பது தான் ஷாலினியின் முதல் கண்டிஷன். தல ரசிகையான ஷாலினிக்கு அஜித்தே நடிக்க கூப்பிட்டது ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்திற்கு பத்து பத்து நாட்களாக கால் சீட் பிரித்துக் கொடுத்த அஜித், திடீரென அந்தப் படத்தின் இயக்குனர் சரணிடம் வந்து, இந்த ஷெட்யூலை மொத்தமாக முடித்து விடுங்கள்.

இல்லை என்றால் நான் ஷாலினியை லவ் பண்ணி விடுவேன் என்று மொத்த ஆர்ட்டிஸ்ட்கள் முன்னிலையிலும் கூறிவிட்டாராம். இதை கேட்ட ஷாலினி வெட்கத்தில் மூழ்கி விட்டாராம். ஷாலினிக்கு மட்டுமல்ல மொத்த செட்டுமே கேட்கும்படி லவ்வை சொல்லிவிட்டாராம்.

Also Read: அஜித் ரொம்ப ஆசைப்பட்டு செய்த ஒரே விஷயம்.. கோடி கணக்கில் பணம் வந்ததால் இழுத்து மூடிவிட்டார்

Trending News