சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ப்ளூ சட்டை மாறனை புரட்டி எடுத்தாங்களா அஜித் ரசிகர்கள்.? பின்னணியில் உள்ள காரணம்

யூடியூப் சேனல் மூலம் பிரபலமாக இருக்கக் கூடியவர் ப்ளூ சட்டை மாறன். ஒரு படம் வெளியாகி விட்டால் அதை உடனே தன் போக்கில் விமர்சனம் செய்வதுதான் இவருடைய முக்கிய வேலை. அதிலும் இவர் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் அவர்களை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிடுவார்.

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் இவர் விமர்சனம் செய்திருந்தார். அதில் இவர் திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடாமல் அஜித்தை உருவ கேலி செய்து விமர்சித்திருந்தார். இதைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு எதிராக கொந்தளித்து சோசியல் மீடியாவில் கருத்துக்களை பரப்பி வந்தனர்.

மேலும் பிரபலங்கள் பலரும் அவரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் சென்னை பிவிஆர் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அவரை அங்கு பார்த்த அஜித் ரசிகர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தாக்கியதாக ஒரு செய்தி போட்டோவுடன் இணையத்தில் பரவி வருகிறது.

ஆனால் இதை ப்ளூ சட்டை மாறன் மறுத்துள்ளார். அதோடு இந்த போட்டோவை எடுத்து வெளியிட்டு இருக்கும் அந்த நபரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது இந்த போட்டோவை ஏன் மறைந்து இருந்து எடுத்தீங்க.

தியேட்டர்னா நாலு பேர் படம் பார்க்க வருவாங்க முடிந்ததும் வெளியே போவாங்க. அதை நேரில் வந்து எடுத்து தொலைய வேண்டியதுதானே. அந்த அளவுக்கு நான் ஒன்னும் பெரிய செலிபிரிட்டி கிடையாது. எப்படியோ வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது ட்விட்டர் தளத்தில் பரபரப்பாகி வருகிறது. அவரின் இந்த பதிவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் தங்கள் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

bluesattaimaran
bluesattaimaran

Trending News