செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

20 வருடங்களுக்கு முன்பே அஜித் செய்த சம்பவம்.. விஜய் கல்வி விருதுக்கு பதிலடி கொடுத்த ஏகே ஃபேன்ஸ்

இப்போது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி உள்ள விஷயம் விஜய்யின் கல்வி விருது நிகழ்ச்சியை பற்றி தான். ஒரு பக்கம் இது கல்வியைச் சார்ந்தது என்று கூறினாலும் மற்றொருபுறம் விஜய்யின் அரசியல் நகர்வுக்கான விஷயம் என்று பார்க்கப்படுகிறது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது விஜய் மாணவர்களுடன் கலந்துரையாடியது மற்றும் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சின்ன சின்ன விஷயங்கள் செய்தது என மேடையிலேயே தன் வசப்படுத்திக் கொண்டார். மேலும் இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : இளைய தலைமுறைக்கு விஜய் சொன்ன 4 விஷயங்கள்.. செல்போனில் மூழ்கியவர்களை காப்பாற்றும் தளபதி

இந்நிலையில் விஜய்க்கு போட்டி என்றால் அஜித் தான் என்று காலகாலமாக இருந்து வருகிறது. அதன்படி விஜய்யின் கல்வி விருது நிகழ்ச்சிக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது 20 வருடங்களுக்கு முன்பே அஜித் மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்துள்ளார்.

அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை இப்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நாங்க எல்லாம் அப்பவே பண்ணிட்டோம் என பெருமைப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் அரசியலுக்காக தான் இதுபோன்று செய்து வருகிறார்.

Also Read : பாபாவுக்கு பின் ரஜினி செய்யாத விஷயம்.. சூப்பர் ஸ்டார் பெயரைக் கெடுத்த விஜய்

ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொல்ல போனால் விளம்பரத்திற்காக இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இந்த உதவிகளை செய்துள்ளார். விஜய் இப்படி செய்வதெல்லாம் பப்ளிசிட்டிக்காக என அஜித் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நடிகர்கள் இவ்வாறு செய்வது நல்ல விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. அதுவும் தனக்குப் பிடித்த நடிகர்களே மாணவர்களை படியுங்கள் என ஊக்குவிக்கும் விஷயம் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் விஜய் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith
ajith

Also Read : அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

Trending News