அஜித் படத்தால் தனுஷுக்கு வந்த சிக்கல்.. தாய்லாந்து ஷூட்டிங்கில் மெத்தனம் காட்டும் அசுரன்

dhanush-ajithkumar
dhanush-ajithkumar

தனுஷ் தற்போது இரண்டு படங்களை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் முடிந்துவிட்டது. பிப்ரவரி 21 இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. மற்றொரு படமான இட்லி கடை படம் தான் தனுசுக்கு இப்பொழுது பெரிய தலைவலியாக இருக்கிறது

இட்லி கடை படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கிட்டத்தட்ட 10 மெயின் ஆர்ட்டிஸ்ட்டுகள் நடித்து வருகிறார்கள். இவர்களது காம்பினேஷன் சீன் தாய்லாந்தில் எடுத்து வருகிறார்கள். இதனால் தான் தனுசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது

ராஜ்கிரன், சத்யராஜ், நித்யா மேனன், அருண் விஜய், பார்த்திபன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து காமினேஷன் சீன்களை எடுத்து வருகிறார் தனுஷ். இதனால் இந்தப் படம் இழுத்துக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஏப்ரல் 10 ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள்.

ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளது. இரண்டு பெரிய படங்கள் மோதுவதால் விநியோகஸ்தர்கள் பெரும் தொகையை கொடுத்து இரண்டையும் வாங்க முடியாது என கூறி வருகிறார்கள். அது மட்டும் இன்றி தியேட்டர் கிடைப்பதும் கஷ்டம்.

இரண்டு படங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால். இட்லி கடை படத்தை கொஞ்சம் தள்ளி ரிலீஸ் செய்யுமாறு கேட்டு வருகிறார்கள்.இதனால் இட்லி கடை படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் இதை ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படம் தள்ளி போவதால் தாய்லாந்து ஷெட்யூல் நிறைய நாள் எடுத்துக் கொண்டாலும் தெளிவாக எடுக்கிறார் தனுஷ்.

Advertisement Amazon Prime Banner