Ajith-Dhanush: வரும் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இதை கொண்டாடுவதற்கு காத்திருக்கின்றனர்.
அதேபோல் டிக்கெட் புக்கிங், பேனர் கட்டுவது, போஸ்டர் என பரபரப்பான வேலைகளும் நடந்து வருகிறது. மேலும் இயக்குனரும் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து ப்ரமோஷன் செய்து வருகிறார்.
ஆனால் அஜித் கார் ரேஸ் பயிற்சியில் இருக்கிறார். இடையில் ஒரு முறை சென்னை வந்திருந்தார். அப்போது தனுஷை அவர் சந்தித்ததாகவும் அடுத்த படம் பற்றி பேசியதாகவும் தகவல் கசிந்தது.
ஆனால் அது உண்மை கிடையாது. பாஸ்போர்ட் புதுப்பிப்பது சம்பந்தமாக தான் அவர் சென்னை வந்திருந்தாராம். வந்து ஒரு நாள் கூட முழுதாக இருக்காமல் மீண்டும் சென்றுவிட்டார்.
அஜித் தனுஷ் மீட்டிங் எப்போ.?
அப்படி என்றால் தனுஷ் அஜித் கூட்டணி இல்லையா என்ற சந்தேகம் தோன்றலாம். அது தான் கிடையாது இன்னும் சில வாரங்களில் அஜித் மீண்டும் சென்னை வருகிறார்.
அப்போது நாம் பேசலாம் என தனுஷிடம் அவர் சொல்லி இருக்கிறாராம். அந்த சந்திப்பின் போது முக்கிய விஷயங்கள் முடிவாகும் என கூறுகின்றனர்.
ஆக மொத்தம் இவர்களின் கூட்டணி இணைய போவது உறுதி. ஆனால் அந்தப் பட சூட்டிங் அடுத்த வருடத்தில் தொடங்குவதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.