அஜித் இந்தியளவில் பல ரசிகர்களைப் பெற்றிருக்கும் நிலையில் தன் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல தோல்வி படங்களை அவர் கொடுத்துள்ளார். அந்த தோல்வி படங்களே இப்போது தலயாக உருவெடுத்துள்ள காரணமாக அமைந்தது என்று பல பேட்டிகளில் தல அஜித் தெரிவித்துள்ளார். முக்கியமாக 1997ஆம் ஆண்டு மட்டும் தல அஜித்தின் 5 திரைப்படங்களும் பெரும் தோல்வியை சந்தித்த திரைப்படங்களாக அமைந்தது. இது எந்த ஒரு ஹீரோக்களுக்கும் இந்திய சினிமாவில் நடந்ததே இல்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட அஜித் நடித்த சொதப்பல் திரைப்படங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
உல்லாசம்: இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி உள்ளிட்டோர் இயக்கத்தில் தல அஜித் ,விக்ரம் மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் உல்லாசம். இத்திரைப்படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான அமிதாப்பச்சன் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்தார். ஒரு பெண்ணை இருவர் காதலிக்கும் ட்ரையாங்கிள் லவ் ஸ்டோரியாக இத்திரைப்படம் உருவானது. இத்திரைப்படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருந்தாலும் இத்திரைப்படம் பெருமளவில் திரையரங்குகளில் ஓடவில்லை.
பகைவன்: இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அஜித், சத்யராஜ், அஞ்சனா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பகைவன். இசையமைப்பாளர் தேவா இசையில் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தர் இத்திரைப்படத்தை தயாரித்தார். வேலை கிடைக்காத விரக்தியில் கடத்தலில் ஈடுபடும் இளைஞனாக அஜீத் நடித்து இருப்பார். அப்போது மினிஸ்டரின் மகளையே கடத்திய அஜித், கதாநாயகிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் காதலை கொண்டுபோகும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. ஆனால் இத்திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இருந்தாலும் சத்யராஜ் காமெடி கலந்த நடிப்பில் அனைவரும் பாராட்டினர்.
ரெட்டை ஜடை வயசு: இயக்குனர் சிவக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ரெட்டை ஜடை வயசு. நடிகை மந்த்ரா, கவுண்டமணி,செந்தில் உள்ளிட்ட நடித்த இத்திரைப்படத்தில் காமெடி கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்தது. சாதாரண காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அந்த ஆண்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தாலும் அஜித் நடித்த இந்தத் திரைப்படமும் சொதப்பலாகவே அமைந்தது.
ராசி: இயக்குனர் முரளி அப்பாஸ் இயக்கத்தில், நடிகர் அஜித், நடிகை ரம்பா,வடிவேலு,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து ராசி திரைப்படம் காதல் காமெடி உள்ளிட்ட கமர்ஷியல் திரைப்படமாக அமைந்தது. இருவேறு குடும்பங்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அந்த ஆண்டு மீண்டும் ஒரு சொதப்பல் திரைப்படமாக நடிகர் அஜித்திற்கு அமைந்தது. இதுவே ரம்பாவும் தல அஜித்தும் சேர்ந்து நடித்த முதலும் கடைசி திரைப்படம் ஆகும்.
நேசம்: இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை மகேஷ்வரி, கவுண்டமணி,செந்தில் மணிவண்ணன்,உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் நேசம். காமெடி கலந்த காதல் கதையை கொண்ட திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். நேசம் திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது இத்திரைப்படம் மூலமாகவே நடிகை மகேஷ்வரி அறிமுகமானார். இந்த நிலையில் நேசம் திரைப்படமும் பல விமர்சனங்களை பெற்ற சொதப்பல் திரைப்படம் ஆகவே நடிகர் அஜித்திற்கு அமைந்தது.
இப்படியே போனால் நன்றாக இருக்காது நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று துணிச்சலுடன் நடித்த அடுத்த படம்தான் அதே ஆண்டு வெளிவந்த காதல் மன்னன். இந்த படம் அஜித் இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இளசுகள் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடினர்
வாழ்க்கையில ஃபர்ஸ்ட் யார் வராங்க என்பது முக்கியம் இல்ல லாஸ்ட்டா யார் ஜெயிக்கிறார்கள் அதுதான் முக்கியம் என்ற நடிகர் சிம்புவின் டயலாக்கை போல நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கை அமைந்தது. தன்னுடைய ஆரம்பகால கட்ட திரைப்படங்களின் பல தோல்வியையும் மீறி தன்னுடைய விடா முயற்சியை எப்போதுமே கைவிடாமல் இன்றுவரை ரசிகர்களுக்காக மட்டுமே திரைப்படங்களை நடித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் மன்னனாக உருவெடுத்துள்ள நடிகர் அஜித் அனைத்து சாதிக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்.