வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிய போகிறது.. அதிர்ச்சி தகவலை சொன்ன அஜித்தின் நண்பர்

Actor Surya: ஒரு நடிகர் புகழப்படுவதும், இகழப்படுவதும் சினிமாவில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கும் ஒன்று.ஒரு சின்ன தீப்பொறி போதும் அவர்களின் வெற்றியை மொத்தமாய் சாம்பலாக்குவதற்கு. அப்படித்தான் தற்போது சூர்யாவின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் அஜித்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி எல்லோரையுமே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

சமீபத்தில் ஞானவேல் ராஜா கொளுத்தி போட்ட விஷயம் பெரிய அளவில் பூதாகரமாக மாறி சிவக்குமார் குடும்பத்தையே உலுக்கி விட்டது. ஏற்கனவே நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடி போனது தமிழ் சினிமா ரசிகர்களிடையே சர்ச்சை கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. தற்போது இந்த பிரச்சனையும் அதோடு சேர்ந்து விட்டது.

அஜித் நண்பரின் பேட்டி

பல வருடங்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் பிருத்விராஜ். இவரை பப்லு என்றும் அழைப்பார்கள். சமீபத்தில் ரிலீசாகி இருக்கும் பான் இந்தியா படமான அனிமல் படத்தில் முக்கிய ரோலில் இவர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார் பப்லு.

Also Read:போறாத காலத்தில் சிவகுமாரின் குடும்பம்.. இதுவரை சிக்கி தவித்த 5 பிரச்சனைகள்

இந்த பேட்டியில் சூர்யாவை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் சொன்ன பிரித்விராஜ் சூர்யா மிகவும் பயங்கரமான மனிதர். அது மட்டுமல்லாமல் அவர் மற்றவர்களை பற்றி யோசிக்கவே மாட்டார். தனக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் அவர் செய்வார் என சொல்லி இருக்கிறார். இதற்கு செல்ஃப் சென்டர் பர்சன் என்னும் வார்த்தையையும் உபயோகப்படுத்தி இருக்கிறார்.

சூர்யாவுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை, அவர் பீல்டு அவுட் நடிகர் என்றும் பிரித்விராஜ் சொல்லி இருக்கிறார். நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என்று அவர் சொல்லியிருக்கும் கருத்து எல்லோருக்குமே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. எதற்காக இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், இவர்கள் இருவருக்கும் இதற்கு முன்பு ஏதாவது சொந்த பிரச்சினை இருந்ததா என்று சரியாக தெரியவில்லை.

Also Read:சூர்யா, கார்த்தியை குட்டிச்சுவராக ஆக்கியதே இவர்தான்.. ஆதங்கத்தில் கண்டபடி திட்டிய சிவக்குமார்

Trending News