வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மனைவிக்கு வெளிநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்.. நாடு நாடாக சுற்றியது வீண் போகல

Actor Ajith: ஒரு பக்கம் ரசிகர்கள் விடாமுயற்சி எப்போது தொடங்கும் என்று கதறி வந்த நிலையில் அஜித் மறுபக்கம் ஜாலியாக பைக்கில் நாடு நாடாக சுற்றிக் கொண்டிருந்தார். இந்நேரம் ரிலீசுக்கு தயாராகி இருந்திருக்க வேண்டிய படம் இன்னும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

அதனாலேயே அஜித் ரசிகர்கள் விடாமுயற்சிக்கு எப்போது விடிவு காலம் வரும் என்று தவிப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும் அக்டோபர் மாதத்தில் அஜித் அதில் பங்கேற்பார் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also read: துபாயில் சீக்ரெட்டாக வேலையை பார்த்த அஜித்.. சேட்டுகளுக்கு தெரியாமல் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்த ஏகே

அது மட்டுமல்லாமல் இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருக்கிறாராம். அதனாலேயே அவர் இப்போது ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது விடாமுயற்சி சூட்டிங் துபாயில் தான் முக்கால்வாசி படமாக்கப்பட இருக்கிறது.

அதனால் அஜித் அங்கு தன் சொந்த வீட்டிலேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். சொந்த வீடா அதுவும் துபாயிலா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மைதான். ஏனென்றால் அஜித் இப்போது துபாயில் பிரம்மாண்டமான ஒரு பங்களாவை வாங்கி போட்டு இருக்கிறார்.

Also read: முதல் முதலாக கோடு போட்ட அஜித்.. ஜெயிலர் வரை தீயாய் பரவும் பழக்க வழக்கம்

இந்திய மதிப்பு படி பார்த்தால் அதன் விலை மட்டுமே பல கோடிகளை தாண்டும் என்கிறார்கள். வெகு நாட்களாகவே அவர் தன் மனைவி ஷாலினிக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாராம். அதனாலேயே அவர் துபாயில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை தன் மனைவிக்கு வாரி வழங்கியிருக்கிறார்.

இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயையும் அவர் அடித்திருக்கிறார். அதாவது நாடு நாடாக சுற்றியது வீண் போகலை என்ற கதையாக வெளிநாட்டில் வீடும் வாங்கியாச்சு, மனைவியையும் சந்தோஷப்படுத்தியாச்சு. அந்த மகிழ்ச்சியோடு அவர் இப்போது விடாமுயற்சியிலும் கவனம் செலுத்த இருக்கிறார். இவ்வாறு அஜித் வெளிநாட்டில் பிரம்மாண்ட வீடு வாங்கி இருக்கும் விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also read: அஜித்தையே அலறவிட்ட அபுதாபி கவர்மெண்ட்.. அசராமல் ஏகே செய்து காட்டிய அந்த விஷயம்

Trending News