விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் பயங்கர சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சி தற்போது மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ஜிபி முத்துவுக்கு அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக களம் இறங்கிய ஜிபி முத்து தன்னுடைய எதார்த்தமான மற்றும் வெள்ளந்தியான நடவடிக்கையின் மூலமாக ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார்.
Also read:இனி இது போன்ற பப்ளிசிட்டி இருக்கக் கூடாது.. தயாரிப்பாளரிடம் உச்சகட்ட கோபத்தை காட்டிய அஜித்
இதன் காரணமாகவே இவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என்றும் நிச்சயம் டைட்டிலை வெல்வார் என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து ஜிபி முத்து இப்போது சினிமாவில் பிஸியாக மாறி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் நடிகை சன்னி லியோனுடன் நடித்திருக்கும் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இவர் சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விட்டு பேசியது வைரல் செய்தியாக மாறியது. கடந்த சில நாட்களாகவே இதுதான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
Also read:சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் ஜிபி முத்து.. கதறி அழும் சிங்கிள்ஸ்
மேலும் தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஜி பி முத்துவுக்கு வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் தான் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஜி பி முத்துவுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இது குறித்து ஜி பி முத்து ஒரு நிகழ்ச்சியின் போது வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
அவரிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய், அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு ஜிபி முத்து அஜித்துடன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். இதனால் குதூகலம் அடைந்த ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also read:பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து