செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வேற லெவல் பதிலடி கொடுத்த அஜித்.. துணிவு பிரிவியூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

அஜித் நடிப்பில் மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் துணிவு திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் ரிலீசுக்கு இன்னும் இரு நாட்கள் கூட இல்லாத நிலையில் தற்போது துணிவு படம் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருக்கிறது. அதிலும் தற்போது இந்த படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பலரும் அஜித்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் துணிவு பிரிவியூ ஷோ பற்றி ரசிகர்களின் விமர்சனங்களை இங்கு காண்போம். வினோத், அஜித் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகி இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். துணிவு படத்தின் பிரிவியூ சோவை பார்த்த பலரும் கதையின் வேகத்தை தான் முதலில் புகழ்ந்து பேசுகின்றனர்.

thunivu-preview
thunivu-preview

Also read: முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?

ஏற்கனவே ட்ரைலர் அதிரடியாக இருந்த நிலையில் தற்போது படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தெரிகிறதாம். அந்த வகையில் வினோத்தின் திரை கதையும் அஜித்தின் நடிப்பும் படத்திற்கு பக்க பலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் முழுக்க முழுக்க என்ஜாய் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் படத்திற்கு பின்னணி இசை தான் உயிர் நாடியாக இருக்கிறதாம்.

thunivu-preview
thunivu-preview

இப்படி படத்தைப் பார்த்த பலரும் இந்தப் பொங்கல் துணிவு பொங்கல் தான் என்று ஆரவாரத்துடன் கூறுகின்றனர். இதுவே படத்திற்கு தற்போது மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்துள்ளது. ஏனென்றால் இப்படம் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் அது அத்தனையும் அடித்து நொறுக்கும் வகையில் துணிவு திரைப்படம் இருக்கிறதாம்.

Also read: ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்

அதனாலேயே அஜித் ரசிகர்கள் தற்போது படு உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படி பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் குடும்ப ஆடியன்ஸை படம் கவருமா என்பது சந்தேகம் தான் எனவும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்பே இயக்குனர் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமனது என்று கூறியிருந்தார்.

thunivu-preview
thunivu-preview

அதனால் நிச்சயம் இப்படம் அனைவரும் கொண்டாடும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் தற்போது வெளிவந்துள்ள பிரிவியூ ஷோ விமர்சனங்களே படம் பற்றிய பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அந்த வகையில் வாரிசா துணிவா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

thunivu-preview
thunivu-preview

Also read: ட்ரைலர்லாம் டம்மி தான்..படத்துல கதைலாம் இல்ல.. துணிவு படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சென்சார் போர்டு

Trending News