வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஷால் நாண நன்னயஞ் செய்த அஜித்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடித்த டபுள் ஜாக்பாட்

குட் பேட் அக்லி படம் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. அஜித் இந்த படத்தை டிசம்பர் இறுதிக்குள் முடிக்குமாறு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கட்டளை போட்டு இருக்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் துபாய் செல்லவிருக்கிறார் அஜித். இதனால் உச்சகட்ட பரபரப்பில் இயங்கி வருகிறது சூட்டிங் ஸ்பாட்.

குட் பேட் அக்லி படத்தை எடுத்தவரை பார்த்து மெய் சிலிர்த்த அஜித் குமார், ஆதிக்கை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார். அடுத்த ப்ராஜெக்ட்டையும் அவரிடமே ஒப்படைக்க திட்டம் போட்டு உள்ளார் ஏ கே. இதை ஆதிக்கிடமும் சொல்லி இருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் போய்க் கொண்டிருக்கும் முன்பே விஷால், மார்க் ஆண்டனி இரண்டாம் பாகம் எடுப்பதற்கு ஆதிக்கிடம் கலந்துரையாடிருக்கிறார். அதனால் அந்தப் இரண்டாம் பாகத்தின் லைன்னையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறார் ஆதிக்.

அஜித் கூப்பிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஷால், அஜித் படம் தான் முக்கியம். வருடைய படத்தை முடித்த பிறகு நாம் இரண்டாம் பாகத்தை ரெடி பண்ணலாமென ஆதிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக விஷால் – மார்க் ஆண்டனி இரண்டாம் பாகத்தை அறிந்த அஜித், ஆதிக்கிடம் நீங்கள் போய் அந்த படத்தின் அடுத்த பார்ட்டை முடித்துவிட்டு வாருங்கள், அதன் பிறகு நாம் மீண்டும் இணைவோம் என கூறி ஆதிக்கை அனுப்பி வைத்துள்ளார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணற் நன்னயம் செய்துவிட்டார் அஜித். இந்த விஷயத்தில் விஷாலும் உயர்ந்து நிற்கிறார்.

Trending News