புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மகிழ் திருமேனிக்கு நெருக்கடி கொடுக்கும் அஜித்.. சலசலப்பாக மாறிய விடாமுயற்சி படப்பிடிப்பு

Ajith in Vidamuyarchi: முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் பற்றி அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்கும். அந்த வகையில் ரஜினி, விஜய், சூர்யா படங்களில் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தி விடும். ஆனால் அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் மிகவும் சீக்ரெட் ஆகவே இருக்கும்.

அதற்கு காரணம் ஒவ்வொரு அப்டேட்டையும் கொடுத்து ரசிகர்களிடம் ஹைப்பை அதிகரித்து விடக்கூடாது. சாதாரணமாக ஒரு படத்தை பார்க்க வருவது போல் திரையரங்குகளில் வந்து பார்க்க வேண்டும் என்று அஜித் நினைக்கக் கூடியவர். ஆனாலும் அஜித்தின் படப்பிடிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் அவர்கள் பக்கத்தில் இருந்து ஒவ்வொரு பதிவிடுவார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம் சுட சுட ஒரு விஷயத்தை வெளியிட்டிருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் எடுத்து இருக்கிறது. அத்துடன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி இருக்கிறது. மற்றும் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

Also read: அஜித்துக்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் கும்பல்.. இறப்பில் கூட இப்படி ஒரு விளம்பரமா?

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் ஆஜர்பைஜானில் துவங்கப் போகிறது. ஆனால் சூட்டிங் நடக்கும் பொழுது அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்கும் ஒரு சில மனஸ்தாபங்கள் வந்துட்டு போகிறது. அதற்கு காரணம் அஜித்தின் ஃபேவரிட் ஒளிப்பதிவுகளாரான நீரவ் ஷா இப்படத்தில் விலகியதால் அஜித்தின் மொத்த கோபமும் இயக்குனர் மீது திரும்பி விட்டது.

அதனாலேயே படப்பிடிப்பை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று அஜித் இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். காரணம் இப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படமான டைம் ட்ராவல் கதையை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதினால். அது மட்டுமில்லாமல் விடாமுயற்சி படத்திற்கு அஜித் கொடுத்த கால்ஷீட் பிப்ரவரி மாதம் வரை தான்.

ஆனால் இயக்குனர் இப்படத்தை மெதுமெதுவாக தான் எடுத்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு 50% மட்டும்தான் முடிவடைந்து இருக்கிறது. இப்படியே போனால் பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பு முடியாது என்பதால் அஜித் தயாரிப்பாளிடம் கண்டிஷனாக பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு சலசலப்புடன் நடந்து கொண்டு வருகிறது.

Also read: நான் வெஜ்ஜை நிறுத்திட்டு சியர்ஸ் போடும் அஜித்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மகிழ் திருமேனி

Trending News