
அஜித் ஏகே கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்கிறார். இதில் மங்காத்தா ரெஃபரன்ஸ் இடம் பெற்றிருக்கிறது.

அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ் நடித்திருக்கிறார். இவர் பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார்.

குட் பேட் அக்லியில் முரட்டு வில்லனாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். கைதி-க்கு பிறகு தரமான சம்பவம் இருக்கு.

அர்ஜுன் தாஸுக்கு ஜோடி போடுகிறார் பிரியா வாரியர்.

எவர்கிரீன் நாயகியான சிம்ரன் கேமியோவில் நடித்துள்ளார். வாலி படத்திற்கு பிறகு இந்த காம்போ இணைந்து இருக்கிறது.

பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பில்லா பட சாயல் இதில் இடம் பெற்று இருக்கிறது.

எப்போதும் போல நகைச்சுவையில் கலக்க ரெட்டின் கிங்ஸ்லி நடித்திருக்கிறார்.

செக்யூரிட்டி கார்டாக பட்டையை கிளப்பி இருக்கிறார் யோகி பாபு.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜாக்கி ஷெரிஃப் குட் பேட் அக்லியில் இணைந்திருக்கிறார்.

துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த ஜான் கோக்கன் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற சுனில் வர்மா குட் பேட் அக்லியில் இடம் பெற்றுள்ளார்.

மலேசியா மியூசிக் பேண்ட் ஆர்டிஸ்ட் ஆன டார்க்கி நாகராஜா கேமியோ தோற்றத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவும் குட் பேட் அக்லியில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.