திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மூளையில கட்டியா.? அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட் இதுதான்

Ajith has a nerve related problem Shocking report given by his manager Suresh Chandra: தமிழ் சினிமாவில்  முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், 15க்கும் மேலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு காவியத்திற்கும், பந்தயங்களுக்கும் தடை போடாமல் கடின உத்வேகத்துடன் முன்னேறி வருகிறார். 

அட்வெஞ்சர்ஸ் விரும்பியான அஜித் கடந்த ஆண்டு துணிவின் வெற்றிக்கு பின் அடுத்த படத்திற்கான இடைவெளி அதிகரிக்கவே, தனி ஒருவனாக பைக்கில் ரைட் செய்து இந்தியா சுற்றும் வாலிபனாக வந்தார். மீண்டும் மகிழ்திருமேனி இயக்கத்தில் திரிஷாவுடன் விடாமுயற்சியில் ஒன்றிணைந்தார். 

Also read:அஜித்துக்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆச்சு.. திக்கு திசை தெரியாமல் நிற்கும் AK

சமூகத்தில் மாற்றத்தை உண்டு பண்ணும் போராளியான கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளதாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது விடாமுயற்சி. பல கட்டங்களாக வெளிநாடுகளில் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் வேளையில் சென்னைக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே பறந்து கொண்டிருந்தார் அஜித். 

விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாததால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. 

அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதெல்லாம் உண்மை இல்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட 1/2 மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆப்ரேஷன் முடிந்த நேற்று இரவே நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார் அஜித்.

மேலும் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக மேற்கூறிய தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா!” முழு ஆரோக்கியத்துடன் இறைவன் அருளால் அஜித் சீக்கிரம் வீடு திரும்புவதோடு உடல்நலமும் தேர்ச்சி பெறுவார் என்று பிராத்திப்போம் 

Also read: அப்பல்லோவில் அஜித்திற்கு ஆபரேஷனா.? அதிர்வலையை ஏற்படுத்திய அதிர்ச்சி ரிப்போர்ட்

Trending News