திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இப்படியே போனா வேலைக்கு ஆகாது.. அடுத்தடுத்த 2 படங்களின் இயக்குனர்களை அறிமுகம் செய்யும் அஜித்

Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் அழுத்து போய்விட்டனர். இப்படியா ஒரு படத்தை இழுத்து அடிப்பது என வெறுத்துப் போய் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இப்போது செம ட்ரீட் காத்திருக்கிறது. துணிவு படம் மாபெரும் ஹிட்டான நிலையில் அதே சூட்டுடன் விடாமுயற்சி படத்தையும் எடுத்து முடிப்பார் என அஜித் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகி கொண்டிருக்கிறது. மேலும் ஒருபுறம் அஜித் தனது பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனாலும் அவருடைய படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Also Read : சுப்பிரமணியபுரம் கொடுத்த தைரியம், ரீ-ரிலீஸ்காக வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்.. அடி போளி அஜித் கூட லிஸ்ட்ல இருக்காரே

இந்த சூழலில் விடாமுயற்சி தாமதம் ஆனாலும் அடுத்த இரண்டு படங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அஜித் வந்து விட்டாராம். விடாமுயற்சி படம் விரைவில் தொடங்கப்பட்டு முழுமூச்சாக தொடர்ந்து 100 நாட்களில் படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக தனது 63 மற்றும் 64 படங்களில் அஜித் கமிட்டாக இருக்கிறார். மேலும் இதுவரை புதிய இயக்குனர்களுடன் பயணிப்பது சிரமம் என்று நினைத்த அஜித் தன்னுடைய ஹிட் பட இயக்குனர்களை தான் அடுத்தடுத்த படங்களில் லாக் செய்ய இருக்கிறார். அதன்படி அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பில்லா.

Also Read : விஜய், அஜித் கதையின்னு கூட்டிட்டு வந்து கழுத்தறுத்த இயக்குனர்.. கடைசியில் சீரியலுக்கு கூட லாயக்கில்லாமல் போன பரிதாபம்

இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் ஏகே 63 படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா தொடர்ந்து ஹிட் படங்களை அஜித்துக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் இவர்களது காம்போவில் கடைசியாக வெளியான விஸ்வாசம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அஜித் மற்றும் சிறுத்தை சிவா கிட்டத்தட்ட நான்கு முறை கூட்டணி போட்ட நிலையில் ஐந்தாவது முறையாக ஏகே 64 படத்தில் இணைய இருக்கிறார்கள். மேலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இவ்வளவு நாள் கால தாமதம் ஆனாலும் இனி புயல் வேகத்தில் செயல்பட இருக்கிறார் அஜித்.

Also Read : விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!

Trending News