புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தூக்கிவிட்ட இயக்குனரை கழட்டிவிட்ட அஜித்.. விஜய் அப்பாவும் விரட்டி விட்ட பரிதாபம்

அஜித் மற்றும் விஜய் இவர்கள் இப்பொழுது உச்ச நடிகராக இருந்து வெற்றியை அடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது அவருடைய படங்களின் இயக்குனர்கள் என்றே சொல்லலாம். இவருடைய ஆரம்ப காலத்தில் உள்ள படங்கள் மூலம் இவர்களுக்கான தனி இடத்தை பிடித்து ரசிகர்களை பெற்றார்.

அந்த வகையில் அஜித்துக்கும், விஜய்க்கும் நிறைய ஹிட் படங்களை கொடுத்து இவர்களை தூக்கி விட்ட சில இயக்குனர்கள் என்றே சொல்லலாம். அஜித் சினிமாவில் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த படம் காதல் கோட்டை. 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கியவர் அகத்தியன்.

Also read: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

இத்திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. அத்துடன் அஜித்திற்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் அஜித் ரசிகர்களை கவர்ந்தார். அத்துடன் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே ஆரம்பித்தது. இப்படத்திற்கு அதிகமான விருது கிடைத்தது. இந்த திரைப்படம் 270 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா திரைப்படமாக மாறியது.

இப்படி அஜித்தை இந்த படத்தின் மூலம் சினிமாவில் வளர்த்து விட்ட அகத்தியன், அடுத்த வாய்ப்பினை எனக்குத் தரும்படி அஜித்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் அந்த வாய்ப்பை அகத்தியனுக்கு கொடுக்கவில்லை. இதனை சற்றும் எதிர்பார்க்காத அகத்தியன் மிகவும் விரக்தி அடைந்தார்.

Also read: விஜய், சூர்யாவை கலாய்த்த காண்ட்ராக்டர் நேசமணி வைரல் போஸ்டர்.. லியோவுக்கு வந்த சோதனை

இதனை அடுத்து விஜய் வைத்து ஒரு படத்தை எடுப்பதற்காக ஒரு கதையை ரெடி பண்ணி எஸ்.ஏ சந்திரசேகரிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய் அப்பா இந்த கதை விஜய்க்கு செட்டாகாது என்று விரட்டி விட்டார். இதனால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிக பரிதாபமாக இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அவரை நம்பி நவரச நாயகன் கார்த்திக் நடித்து அகத்தியனை தூக்கி விட்டார். அந்தப் படம் தான் கோகுலத்தில் சீதை. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் படமாக ஆனது. இந்த படம் கார்த்திக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்தப் படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு விருது கிடைத்தது.

Also read: இதுவரை தமிழில் கலக்கிய 16 காதல் திரைபடங்கள்! இதோ முழு லிஸ்ட்

Trending News