ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜயகாந்த்காக கூட வரல, உயிர் நண்பன் வெற்றிக்காக ஓடோடி வந்த அஜித்.. காட்டு தீயாக பரவும் ஃபோட்டோ

Ajith – Vijayakanth : சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக கார் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒன்பது நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சென்னைக்கு கொண்டு வர உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் வெற்றி துரைசாமி இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் சாகசம் நிறைந்த வாழ்க்கையை விரும்பும் அஜித் இது போலவே வெற்றியும் இருப்பதால் இருவருக்குள் ஒரு நெருக்கமான உறவு இருந்துள்ளது. மேலும் இருவரும் சேர்த்து எடுத்துக்கொள்ள புகைப்படங்களையும் வெற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக வெற்றியின் இறப்பு அஜித்தை நிலைகுலைய செய்துள்ளது. இதன் காரணமாக அவரது உடல் சென்னைக்கு வருவதற்கு முன்பாகவே அஜித் மற்றும் ஷாலினி இருவரும் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். மேலும் வெற்றியின் அப்பா சைதை துரைசாமிக்கு அஜித் ஆறுதல் கூறியிருக்கிறார்.

Also Read : வெற்றி துரைசாமி மாதிரியே அதன் மீது அஜித்துக்கு இருந்த தீரா காதல்.. நண்பனுடன் வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் உயிர் நண்பனுக்காக இவ்வாறு ஓடோடி வந்த அஜித் விஜயகாந்திற்கு வராதது இப்போது சர்ச்சையாக கிளம்பி இருக்கிறது. அதாவது சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்த கேப்டன் விஜயகாந்த்க்கு முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் போன்ற பிரபலங்கள் நேரில் சென்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தி இருந்தனர்.

கேப்டன் இறந்த போது அஜித் துபாயில் இருந்த காரணத்தினால் அவரால் வர முடியாமல் போனது. ஆனாலும் நட்பு என்று வரும்போது தனது என் நண்பனின் உடலை பார்க்க அஜித் முதல் ஆளாக பதறி அடித்துக் கொண்டு வந்தது எல்லோரையுமே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இருந்த போதும் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் அஜித் கலந்து கொள்ளாதது எல்லோர் மனதிலும் சிறு நிரடலாக தான் இருக்கிறது.

வெற்றிக்காக ஓடோடி வந்த அஜித்

ajith-shalini
ajith-shalini

Also Read : ஒரே படத்தில் 43 விருதுகள் வென்ற வாரிசு! சாகச பயணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அஜித்தின் உயிர் நண்பர்

Trending News