செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒண்ணுமே ரெடி பண்ணாமல் கோடிக்கணக்கில் பேசிய பேரம்.. அஜித்தின் வெறுப்பை சம்பாதித்த இயக்குனர்

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்த சமயத்தில் திடீரென்று அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து தூக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அதாவது ஆறு மாதத்திற்கு மேலாக ஏகே 62 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையை முடிக்கும்படி அஜித் விக்னேஷ் சிவனுக்கு கால அவகாசம் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதை சரியாக செய்யாத விக்னேஷ் சிவன் வேறு வேலைகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். அதனால் இப்போது ஏகே 62 படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை கேட்டிருக்கிறார் அஜித்.

Also Read: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

அஜித் அதற்கு நேரமும் கொடுத்திருக்கிறார் கொடுத்த நேரத்தில் படத்தின் பாதி ஸ்கிரிப்ட்டை மட்டும் ரெடி பண்ணி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்படி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் கதை ஒன்னுமே ரெடி பண்ணாமல் கோடிக்கணக்கில் பேரம் பேசியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அஜித் எதுலையுமே ஒரு பஞ்சுவாலிட்டி எதிர்பார்ப்பார். கதை ரெடி பண்ணவில்லை சந்தானத்துடைய ரோல் என்னவென்று தெரியாது. அதற்குள் அவருக்கு பல கோடிகள் சம்பளத்தை பேசி இருக்கிறார்கள். கேட்டால் சந்தானத்திற்கு முக்கியமான ரோல் என்கிறார்கள். ஆனால் அஜித்திடம் கதை சொல்ல மறுக்கிறார் விக்னேஷ் சிவன். இதனாலே அஜித் அப்செட் ஆகி வெறுத்துவிட்டார்.

Also Read: அஜித் வெறுத்து ஒதுக்கிய பின் கேரியரை இழந்த 5 இயக்குனர்கள்.. விக்னேஷ் சிவன் கதி அதோ கதி தான் போல

மேலும் விக்னேஷ் சிவன் அஜித்திடம் ஒன்று பேசுவது, தயாரிப்பு நிறுவனத்திடம் மற்றொன்று பேசுவதை தொடர்ச்சியாக செய்திருக்கிறார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி அஜித் இந்த படத்திற்கு ஜூலை 15 ஆம் தேதி வரை தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

ஆனால் படத்தின் ஸ்கிரிப்ட்டை சரியாக ரெடி பண்ணாத விக்னேஷ் சிவன் அஜித்திடம் செப்டம்பர் வரை டேட் கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரச்சனை இருக்கும் நிலையில் ஏகே 62 படப்பிடிப்பிற்கு ரெடியாக இருக்கும் அஜித், விக்னேஷ் சிவன்தான் பிரச்சனை என்றால் இயக்குனரை மாற்றிவிடலாம் என்ற முடிவை தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து எடுத்திருக்கிறார்.

Also Read: ரெட் ஜெயண்ட் உதயநிதியால் கிடைத்த அஜித் பட வாய்ப்பு.. தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் ஆடும் பிரபலம்

Trending News