திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தூக்கிவிட்ட நண்பன் சாவுக்கே வரல கேப்டன் எல்லாம் எம்மாத்திரம்.. ஊருக்கு தான் உபதேசமா? அஜித் செய்தது சரியா!

Ajith Ignored His Friend’s Death: எத்தனையோ மக்களுக்கு சோறு போட்டு பசியை போக்கிய விஜயகாந்த் கடந்த வருட இறுதியில் மரணமடைந்தார். மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அவருடைய இறப்பு இன்றும் கூட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் இருக்கிறது.

அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் சாரை சாரையாய் மக்கள் வந்து கண்ணீர் சிந்துவதே அதற்கு சாட்சி. ஆனால் அவருடைய மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட பல நடிகர்கள் வரவில்லை. அதில் முக்கியமாக அஜித் வராதது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் இருந்தார் சரி. ஆனால் அதன் பிறகாவது ஒரு முறை அவருடைய வீட்டிற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாமே. ஆனால் அதை கூட அவர் செய்யாதது தான் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

Also read: அஜித் போன் பண்ணியும் கால் எடுக்காத நடிகர்கள்.. இதனால் தான் யாரையும் மதிப்பதில்லை ஏகே

அதாவது அஜித்துக்கு ஏகப்பட்ட வெற்றி படங்களை தந்து நெருக்கமான ஒரு நண்பராக இருந்தவர் தான் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக இவர்களுக்குள் ஒரு சிறு பிளவு ஏற்பட்டது. என்னதான் பிரச்சனை இருந்தாலும் ஒரு மனிதன் இறந்து விட்டால் இறுதி மரியாதை செய்வது தான் மனித இயல்பு.

ஆனால் அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் மரணத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. அதற்கு மாறாக குடும்பத்தாருக்கு போன் பேசினார் என்ற தகவல் மட்டும் வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்று கூட தெரியாது. இப்படி தன்னை தூக்கி விட்ட உயிர் நண்பனையே மறந்தவர் தான் அஜித். அப்படி இருக்கும் போது அவருக்கு கேப்டன் எல்லாம் எம்மாத்திரம்.

நடிகர் சங்க முன்னாள் தலைவராக இருந்ததற்கு உறுப்பினர்கள் சென்று இறுதி மரியாதை செலுத்துவது கடமை. அஜித் அதை செய்ய மறந்து விட்டார். ஒரு பழைய பேட்டியில் அஜித் அவரவர் கடமையை அவரவர் செய்தால் நாடு நன்றாக இருக்கும் என கூறினார். இப்படி ஊருக்கு உபதேசம் செய்த அஜித் தன்னுடைய கடமையை மறந்தது சரியா? என பத்திரிக்கையாளர் அந்தணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Also read: ஏ ஆர் முருகதாஸை உருவ கேலி செய்த அஜித்.. உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்த அந்தணன்

Trending News