திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தல அஜித்தின் சூப்பர் ஹிட் படம் பிரபல ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பியா.? அடக்கொடுமையே!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் அனைவரும் ரீமேக் திரைப்படங்களில் நடிப்பது இயல்பான ஒரு விஷயம். மற்ற மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களின் உரிமைகளைப் பெற்று அந்த படத்தை இயக்கி வெற்றி பெறுவது என்பது அனைத்து இயக்குனர்களும் செய்வது. இப்பொழுது பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் வளரும் பொழுது வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.

அதே மாதிரி நடிகர் அஜித் குமார் நடித்த ஒரு படம் காப்பியடித்து எடுத்து வெற்றியும் பெற்றது. அந்த படம்தான் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தை 2000 ஆண்டு மே மாதம் வெளியாகி அந்த காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது.

Also Read : அஜித் மீது அடங்காத பொறாமையில் உலகநாயகன்.. கமலை மிரட்டிய அந்த 2 படங்கள்

மிகப்பெரிய வெற்றியும் பெற்று இன்றுவரை அந்த படத்திற்கு என்று ஒரு நல்ல பெயர் நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் ஆங்கில படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட படம். இந்த படம் அஜீத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். அது மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்த இன்னும் சில ஹீரோக்களுக்கும் திருப்புமுனையாக அமைந்த படம்.

ஒரு நிகழ்ச்சியில் ராம்கோபால் வர்மா இந்த விஷயத்தை சொல்லி ராஜீவ்மேனனை கிண்டலடித்து பேசினார். அப்போது தான் அனைவருக்கும் இந்த படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான சென்ஸ்ஸ் அண்ட் சென்சிபிலிடி படத்தின் என்ற படத்தின் காப்பி என தெரியவந்தது. இந்த விஷயம் அஜித்குமாருக்கு பின்னர் தெரிந்து வருத்தபப் பட்டதாக கூறப்படுகிறது.

Also Read : முன்னணி நடிகர்கள் தவறவிட்டு மெகா ஹிட் ஆன திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

வருத்தப்பட்டாலும் அஜித்குமாருக்கு அதன் பின் வரும் பட வாய்ப்புகள் நன்றாக அமைந்தன. ராஜீவ்மேனன் அந்த படத்தை அவரது ஸ்டைலில் இருந்ததால் அது காப்பி என தெரியவில்லை. பெரிய விஷயமாகவும் பேசப்படவில்லை. பின்னர் ராஜீவ்மேனன் நிறைய தமிழ் படங்கள் எடுக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் படங்கள் இயக்கினார்.

என்னதான் காப்பியடிக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் அந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கொடுக்கும் இயக்குனர்கள் சில பேர் மட்டுமே. அதில் ராஜிவ் மேனன் முக்கியமான இயக்குனர்.காப்பி அடித்தாலும் மற்றவருக்குத் தெரியாமல் அதை மாற்றுவது கூட ஒரு திறமை தான் வெற்றியும் பெற்றார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காரணம் இதில் அஜித் நடித்ததால் இப்பொழுது பேசிவருகிறார்கள்.

Also Read : அஜித்தை டென்ஷனாகிய மங்காத்தா தயாரிப்பாளர்.. இதற்கெல்லாம் காரணம் சூர்யா தானா

Trending News