Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான அஜித்.. கேரளா கோவிலில் நடைபெற்ற அந்த சம்பவம்

கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான அஜித்.. கேரளா கோவிலில் நடைபெற்ற அந்த சம்பவம்

அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் உடன் அஜித் 61 படத்தில் இணைய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித் கேரளா சென்று பல ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகிறார். […]

அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் உடன் அஜித் 61 படத்தில் இணைய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித் கேரளா சென்று பல ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகிறார்.

தன்னுடைய அடுத்த படத்திற்காக உடம்பை குறைப்பதற்காக அங்கு பல யுத்திகளை அஜித் கையாண்டு வருகிறார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்நிலையில் அஜித் கேரளா கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

மேலும், வலிமை படத்தில் பல ஸ்டன்ட் காட்சிகள் இருந்தது. இதனால் அஜித்துக்கு ஏற்பட்ட காயத்துடன் ஆன புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கான சிகிச்சைக்காகவும் அஜித் கேரளா சென்று உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கேரளாவில் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் அஜித் ஒரு ஆண் ரசிகருடன் மிக நெருக்கமாகவும், ஒரு பெண் ரசிகருடன் ஒரு அளவு டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணியும் போட்டோக்கள் எடுத்திருக்கிறார்.

அஜித்திற்கு நடிப்பை தாண்டி குணத்திற்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் அவருடைய நற்பண்பை அடிக்கடி நிரூபித்துக் கொண்டு வருகிறார். தற்போது கேரளாவில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

ஏனென்றால் கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டாக அஜித் இப்படி போட்டோ எடுத்துள்ளார். ஒரு ஆணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் இந்த போட்டோவை எடுத்துக் கொள்ளும் விதத்திலேயே தெரிகிறது. அஜித் உடைய ஒழுக்கமும், நேர்மையும் இதில் தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ajith
ajith
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.