புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்க்கு ஸ்பீடு பிரேக் போட்டே ஆகணும் அதிரடியாக முடிவெடுத்த அஜித்.. நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட் மாஸ்டர் டா!

Ajith : ஆரம்பமே அமர்க்களம் என்று சொல்வதற்கு ஏற்ப இந்த வருடம் துவக்கத்திலேயே அஜித்துக்கு சுக்கிர திசையாக துணிவு படம் மாபெரும் வெற்றியை கொடுத்து வசூல் அளவில் நல்ல லாபத்தை கொட்டிக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவருடைய அடுத்த படத்திற்கு பல குளறுபடிகள் ஏற்பட்டு பல மாதங்களாக இழுவையில் இழுத்தடித்தது.

அந்த வகையில் இவருடைய விடாமுயற்சி படத்திற்கு இப்பொழுது தான் விடிவுகாலம் பிறந்தது போல் படப்பிடிப்பு தற்போது ஒரு வழியாக தொடங்கி இருக்கிறது. ஆனால் துணிவு படத்துடன் போட்டி போட்டு வந்த விஜய்யின் வாரிசு படத்திற்கு பிறகு லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிவிட்டது. அடுத்த படமான வெங்கட் பிரபுவுடன் இணைந்து பட பூஜை போட்டு, சூட்டிங்கையும் ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் எப்படியும் அடுத்த வருடம் இந்த படமும் ரிலீஸ் ஆகி விடும். ஆக மொத்தத்தில் விஜய் கிட்டத்தட்ட ரெண்டு படங்களில் நடித்தது போல் ஆகிவிடும். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அஜித் இப்படியே இனிமேல் இருந்தால் சரிப்பட்டு வராது என்று அதிரடியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு பிறகு அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் பண்ணுவதாக இருந்தது. ஆனால் தற்போது சிறுத்தை சிவா கங்குவா படத்தில் பிசியாக இருப்பதால் எப்படியும் கொஞ்சம் டைம் ஆகும். அதனால் அதுவரை நம்முடைய நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாது என்று முடிவு பண்ணிய அஜித் அடுத்த படத்தை உறுதி செய்யப் போகிறார்.

அதனால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உடனடியாக படம் பண்ணப் போகிறார். இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே நடந்து முடிந்ததால் கூடிய விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவர போகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகி விஜய்க்கு போட்டியாக வரப்போகிறார். இதற்கிடையில் இவருடைய ஆசைப்படி வேர்ல்ட் டூர் மோட்டார் கம்பெனியை ஆரம்பித்துவிட்டார். அத்துடன் இதை பார்த்துக் கொள்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் இனி நடிப்பில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி விஜய் கேரியருக்கு ஸ்பீடு பிரேக் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார். அதாவது நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் என்று கெத்தாக வருகிறார்.

Trending News