வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு படத்தை போல் துணிவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் உச்சகட்ட டென்ஷனில் அஜித்

விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு மோதி கொள்கிறது. இதில் வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாக்கி இருக்கும் துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதம் இடைவெளியே உள்ளதால் படத்திற்கான பிரமோஷன் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் செகண்ட் சிங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : விளம்பரம் தேவையில்லை என சொன்னது எல்லாம் பொய்யா.? வினோத்தை வைத்து துணிவு அஜித் ஆடும் ஆட்டம்

அதேபோல் துணிவு படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்த வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா பாடல் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

மேலும் சில்லா சில்லா பாடலை அனிருத் பாடி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இந்தப் பாடலுக்காக ஆர்வமாக காத்திருந்த நிலையில் நேற்று இதில் 10 வினாடிகள் உள்ள பாடல் வரிகள் லீக் ஆகி துணிவு பட குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்தப் பாடல் எப்படி வெளியானது என்று குழப்பத்தில் உள்ள போதே காசேதான் கடவுளடா என்ற இன்னொரு பாடலும் வெளியாகி உள்ளது.

Also Read : ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் அஜித்.. இணையத்தை அதிரவிடும் துணிவு படத்தின் புதிய ஸ்டில்கள்

ஆரம்பத்தில் இவ்வாறு தான் வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் துணிவு படத்தின் பாடல்கள் தினமும் வெளியாகி வருவதால் உச்சகட்ட டென்ஷனில் அஜித் உள்ளாராம்.

இந்த பாடல்கள் எப்படி இணையத்தில் கசிந்தது என்பதைப் பற்றிய தற்போது படக்குழுவினர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இணையத்தில் வெளியான இந்த பாடல்களை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என துணிவு படக்குழு வேண்டுகோள் வைத்துள்ளது. ஆனாலும் இந்த பாடல்கள் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Also Read : அஜித்துக்கு இயக்குனர் கொடுத்த டார்ச்சர்.. எல்லாருடைய சாபத்தினால் பறிபோகும் பட வாய்ப்பு

Trending News