வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

படம் கைமாறியதால் விஜய் விட அதிக சம்பளத்தில் அஜித்.. ஜெட் வேகத்தில் எகிறிய மார்க்கெட்

Actor Ajith : ரஜினி மற்றும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் அஜித்தின் நடிப்பில் துணிவு படம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் மற்ற படங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது. அதுவும் விடாமுயற்சி படம் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எல்ரெட் குமார் சந்தானம் தயாரிப்பில் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் எல்ரெட் குமார் இப்போது விடுதலை 2 படத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் அவரால் அஜித் படத்தை தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் இந்த படம் தெலுங்கு தயாரிப்பாளர் மைத்திரி மூவிஸ் இடம் கைமாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அஜித் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது 175 கோடி சம்பளம் பேசப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்திற்கு 195 கோடி சம்பளம் அஜித்துக்கு கொடுக்கப் போகிறார்களாம்.

Also Read : மிச்ச இருந்த மானத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிட்டான்.. லியோவால் விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்

மேலும் இப்போது விஜய் வாங்கும் சம்பளத்தை விட இது அதிக மடங்கு ஆகும். விஜய்யாவது வாரிசு படத்திற்கு அடுத்ததாக லியோ படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தளபதி 68 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் அஜித்தின் படம் ரிலீஸ் ஆகாமலே அவரது சம்பளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு அஜித் வந்திருக்கிறார். மேலும் இப்போது விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து வருகிறது. இந்த வகையில் அஜித்தின் சம்பளமும் இப்போது ஜெட் வேகத்தில் ஏறி இருக்கிறது.

Also Read : அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

Trending News