ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மத்தவனா இருந்தா பக்கவாதம் வந்திருக்கும்.. உயிரைப் பணயம் வைத்து அஜித் செய்யும் காரியம்

Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி தற்போது வரை தொடங்காமல் இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் எப்படியும் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வருகிறார். மேலும் வெளியில் அஜித்தை பற்றி தவறான ஒரு பிம்பம் இருக்கிறது.

அதாவது மிகவும் தலைகனம் பிடித்தவர், எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அஜித்துடன் நெருங்கி பழகிய பலரும் கூறிய விஷயம் என்னவென்றால் அவரைப் போன்று ஒரு நல்ல மனிதரை பார்ப்பது மிகவும் அரிது என்று கூறி வருகிறார். அந்த வகையில் நடிகர் அப்பாஸ் அஜித்தை பற்றி கூறியிருக்கிறார்.

Also Read : புத்தகக் கதைகள் மூலம் உருவாக்கப்பட்ட 6 படங்கள்.. அஜித்துக்கு ஹிட் கொடுத்த அந்த படம்

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிசியான நடிகராக வலம் வந்த அப்பாஸ் சிறிது வருடங்களிலேயே மார்க்கெட் போனதால் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். இந்த சூழலில் சமீபத்தில் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அப்பாஸ் அஜித்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார். அதாவது அஜித் மிகவும் மோசமான விபத்துக்களை சந்தித்து இருக்கிறார்.

அப்போது மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி இனிமேல் அஜித் படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் அஜித் தனக்கு விருப்பமான வேறு ஒரு விஷயத்தை செய்து கொண்டு போய் இருக்கலாம். ஆனால் தனது ரசிகர்களுக்காக மட்டுமே தொடர்ந்து உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும் சினிமாவில் நடித்து வருகிறார்.

Also Read : அஜித்தின் வேதாளத்தை ரீமேக் செய்ய இதுதான் முக்கிய காரணம்.. அடேங்கப்பா! என்ன ஒரு புத்திசாலித்தனம்

அஜித் இடத்தில் மற்றவர்கள் இருந்திருந்தால் பக்கவாதம் வந்திருக்கும். ஆனால் அவருடைய விடாமுயற்சி மற்றும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் தற்போது வரை அஜித் நடித்து வருகிறார் . அதோடு மட்டுமல்லாமல் தனது விருப்பமான பைக் சுற்றுப் பயணத்தையும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் அஜித்திடமிருந்து உத்வேகம், விடாமுயற்சி ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்பாஸ் கூறியிருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மிகவும் நல்ல குணம் உடையவர் என்று அஜித்துக்கு புகழாரம் கொடுத்திருக்கிறார் அப்பாஸ். இந்த வீடியோ அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read : லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்

Trending News