செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

2 நண்பர்கள் மரணத்தால் நடுநடுங்கி நிற்கும் அஜித்.. வட்டத்தை விட்டு வெளிவர பயப்படும் AK

Ajith is shocked by the death of his 2 friends: “என் வாழ்க்கை வட்டமோ சதுரமோ கிடையாது! எப்போதுமே நேர்கோடு தான்! ஏற்ற இறக்கம் இருந்தாலும் எதிரில் யார் வந்தாலும் கண்டுக்காம போயிட்டே இருப்பேன்” என்ற வசனத்தை நேர்பட பேசி இருந்த அஜித் அவர்கள், தன் நெருக்கமானவர்களுக்கு ஒன்று என்றால் நொறுங்கி போய்விடுவார்.  

துணிவின் வெற்றிக்கு பின் மகிழ் திருமேனியுடன் உடன் விடாமுயற்சியில்  கைகோர்த்தார் அஜித். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு  அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. ஆக்சன் திரில்லர் மூவி ஆக  விறுவிறுவென ரெடியாகி வரும் விடாமுயற்சி பல்வேறு சோதனைகளை கடந்து வருகிறது. 

அதில் ஒரு பகுதியாக சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர்மிலன் அவர்கள் மாரடைப்பு காரணமாக திடீரென இறந்தது இக்குழுவினரின் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பில்லா, வீரம், வேதாளம் என அஜித்தின் பல படங்களுக்கும் விஜய்யின் வேலாயுதம் படத்திற்கும் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் தான் மிலன். 

Also read: மூளையில கட்டியா.? அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட் இதுதான்

சூட்டிங்கிற்க்கு முன்பாக அஜித்துடன் தொடர்பு கொண்ட மிலன் இன்னும் அரை மணி நேரத்தில் வருவதாக கூறியுள்ளார். மிலன் கடைசியாக பேசிய நபர் அஜித்தானாம். நேரம் கடந்ததும் வராதது கண்டு, மீண்டும் அவருக்கு கால் செய்துள்ளார் அஜித். மிலனின் உதவியாளர்கள் அவரது இறந்த செய்தியை அஜித்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதே போல் இவரது நண்பர் வெற்றி துரைசாமியின் மரணம் திடீரென நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மரணங்களால் நிலை குலைந்து போன அஜித். முதற்கட்ட நடவடிக்கையாக லைக்காவை அழைத்து மெடிக்கல் கேம்ப் ஒன்று ஏற்பாடு செய்து அங்கு இருக்கும் பணியாளர்களின் உடல் நிலையை பரிசோதிக்க செய்தாராம். 

மிலனுக்கு இரண்டு மனைவி என்பதால் மிலனின் உடலை எங்கு வைப்பது என அவர்கள் இருவரிடமும் கலந்து பேசி, அஜர்பைஜான் நாட்டிலிருந்து உடலை கொண்டு வருவதற்குரிய ஏற்பாடு செய்து வருகிறாராம் அஜித். வெளியே வர மாட்டிக்கிறார் என்று கொளுத்தி போடும் மீடியாக்களே! “தன்னை நெருங்கியவர்களை யார் பத்திரமாக பார்த்துக் கொள்கிறாரோ!, தனது உதவி யாருக்கு  தேவைப்படுகிறதோ!” அங்கே ஓடி போய் உதவுறால்ல அதுதான் சார் மனிதம். மனிதத்தோடு உயர்ந்து நிக்கும் இந்த மனிதரை வேறென்ன சொல்வது!

Also read: ஆத்விக் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்.. மெஸ்ஸி பாய் பார்ட்டி போட்டோஸ் வைரல்

Trending News