Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சல்மான்கான் தானே கூப்பிட்டாருனு சட்டை காலரை தூக்கி விட்ட இயக்குனர்.. அஜித்க்கு டாட்டா போட்டவருக்கு வந்த ஆப்பு

சல்மான்கான் தானே கூப்பிட்டாருனு சட்டை காலரை தூக்கி விட்ட இயக்குனர்.. அஜித்க்கு டாட்டா போட்டவருக்கு வந்த ஆப்பு

Ajith : தமிழ் நடிகர்கள் மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல் தான் இங்கு உள்ள இயக்குனர்களும் பிறமொழி படங்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் இயக்குனர் ஒருவர் சல்மான் கானை நம்பி பாலிவுட் […]

Ajith : தமிழ் நடிகர்கள் மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல் தான் இங்கு உள்ள இயக்குனர்களும் பிறமொழி படங்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் இயக்குனர் ஒருவர் சல்மான் கானை நம்பி பாலிவுட் பக்கம் சென்றார்.

ஆனால் சல்மான் கான் வேறு ஒரு இயக்குனரை புக் செய்த நிலையில் படம் இல்லாமல் வெறும் கையோடு இருக்கிறார் அஜித் பட இயக்குனர். அதாவது அஜித்துக்கு பில்லா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் விஷ்ணுவர்தன்.

இவர் சல்மான்கான் வைத்து படம் எடுக்கலாம் என்று பாலிவுட் பக்கம் சென்றிருந்தார். அதோடு விடாமுயற்சி படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில் அஜித் விஷ்ணுவர்தனை அணுகியிருந்தார். ஆனால் பாலிவுட்டில் பிஸியாக இருப்பதாக விஷ்ணுவர்தன் மறுத்துவிட்டார்.

ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட்ட சல்மான் கான்

ஆனால் கடைசியில் ஏ ஆர் முருகதாஸுக்கு சல்மான் கான் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இப்போது சல்மான் கான் படத்திற்கான வேலையிலும் இறங்கி உள்ளார்.

மேலும் சல்மான் கானின் கால்ஷுட் கையில் இருக்கிறது என சட்டை காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய விஷ்ணுவர்தன் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாராம். இப்போது தமிழ் நடிகர்களும் அவரது படத்தில் நடிக்க முன் வரவில்லை.

இதனால் பாலிவுட்டில் வேறு நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக சல்மான் கான் நம்பி அஜித்தின் பட வாய்ப்பையும் விஷ்ணுவர்தன் நழுவ விட்டிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.