புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அஜித்தை டார்ச்சர் பண்ணும் மகிழ்திருமேனி.. விக்னேஷ் விட்ட சாபத்தால் விடாமுயற்சிக்கு ஏற்பட்ட சோதனை

Ajith in Vidamuyarchi: கடந்த இரண்டு மூன்று நாட்களாக அஜித் பற்றிய ஒரு விஷயம் அனைவரையும் பரிதவிக்க விட்டது. அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதை ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டதாகவும் தகவல் கிளம்பியது. ஆனால் இவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா இது முற்றிலும் வதந்தி தான்.

அஜித்தின் காதிற்கு கீழே சின்ன கட்டி இருந்ததாகவும் அதை அகற்றப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து நல்லபடியாக வீடு திரும்பி விட்டார். அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் போவாரு என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் தற்போது அஜித் இருக்கும் நிலைமையில் படபிடிப்புக்கு போக முடியாதாம். இன்னும் கொஞ்ச நாள் ஓய்வு வேண்டும் என்று கூறிவிட்டார். அந்த வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் 80 நாட்கள் தேவைப்படுகிறது. அப்போ இத்தனை மாதங்களாக மகிழ் திருமேனி என்னதான் பண்ணிக் கொண்டிருந்தார் என்ற ஒரு கேள்வி எழும்பி வருகிறது.

Also read: காலை சுத்துன பாம்பாக டார்ச்சர் பண்ணும் விடாமுயற்சி.. சூப்பர் ஸ்டாரை மலைபோல் நம்பும் லைக்கா

அதாவது மகிழ் திருமேனியை பொறுத்தவரை படப்பிடிப்பை ஸ்லோவாக தான் கொண்டு போவாராம். ஏனென்றால் அவருக்கு அந்த காட்சிகள் முழுமையாக பிடித்திருந்தால் தான் அடுத்த காட்சியை சூட் பண்ணுவாராம். இது அங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல அஜித்துக்கும் அதிக அளவில் கடுப்பை ஏற்றி விட்டிருக்கிறது. அதனால் அஜித் இது மாதிரி எல்லாம் இனி பண்ண கூடாது என்று சொல்லித்தான் படப்பிடிப்பையே ஆரம்பித்திருக்கிறார்.

ஆனாலும் அவர் எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் இஷ்டப்படி தான் இருந்திருக்கிறார். அந்த வகையில் ஒரு காட்சியை மட்டுமே கிட்டத்தட்ட நான்கு நாட்களாக எடுப்பாராம். அஜித் சொல்லியும் அவரை டார்ச்சர் பண்ணும் அளவிற்கு மகிழ் திருமேனியின் செயல்கள் இருந்திருக்கிறது. இன்னும் 80 நாள் சூட்டிங் இருக்கிறது. அப்படி என்றால் அஜித் இதற்கு எப்படி ஒத்துழைப்பு கொடுக்கப் போகிறார் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

அது மட்டும் இல்லை இதற்கெல்லாம் காரணம் விக்னேஷ் சிவன் விட்ட சாபம் தான் தற்போது விடாமுயற்சி படத்திற்கு மிகப்பெரிய சோதனையாக வந்து கொண்டே இருக்கிறது என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதாவது கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் விக்னேஷ்-க்கு போய்விட்டது. அப்பொழுது அவர் விட்ட கண்ணீர் தான் மொத்தமாக அனைவரையும் ஆட்டிப்படைத்து மிகப்பெரிய சோதனையாக ஏற்பட்டிருக்கிறது.

Also read: தறி கெட்டவர்களை தெறித்து ஓட செய்யும் அஜித்.. விடாமுயற்சியால் ஏற்பட போகும் மாற்றம்

Trending News