மாஸாக இருக்கும் அஜித்.. ஏகே 61 படத்தில் எத்தனை கெட்டப் தெரியுமா?

தல அஜித்தின் வலிமை படத்தில் அடுத்து ஏ கே 61 திரைப்படத்தில் இயக்குனர் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கைகோர்க்கிறார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏகே 61 திரைப்படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தல அஜீத்தின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. தல அஜித்திற்கு பிடித்தமான பைக் ரேஸ், ஆக்சன் உள்ளிட்ட காட்சிகளுடன் இயக்குனர் ஹெச் வினோத் இத்திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்துடன் ஏகே 61 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதனிடையே இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இன்னும் மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வாகாத நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகர் அஜித் ஆழ்வார், வாலி, சிட்டிசன் உள்ளிட்ட திரைப்படங்களில் இரு வேடத்தில் நடித்த நிலையில் தற்போது முதல் முறையாக ஐந்து வேடங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி வெள்ளை தாடியுடன் காதில் கடுக்கன் அணிந்த கெட்டப்பில் நடிகர் அஜீத் தற்போது உலா வருகிறார்.

இதனிடையே ஏகே 61 திரைப்படத்தின் ஐந்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று என தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா தல அஜித்துடன் நான்காவது முறையாக ஜோடி சேருவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது இன்னும் அதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை முடிவடைந்த நிலையில் த்ரில்லர் படமாக தல அஜித்தின் ஏகே 61 திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் சமீபகாலமாக நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வரத் தொடங்கியுள்ளன. நடிகை ஷாலினியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களும், கேரளாவில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →