புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஓவரா அலைக்கழிக்கும் சூர்யா.. மற்றொரு நடிகருக்கு நடையை கட்டிய பிரபல இயக்குனர்

சூர்யாவிடம் சிறுத்தை சிவா பலமுறை கதையை சொல்லி இருந்தும் இது சரியில்லை, அது சரியில்லை என்று குறை சொல்லி வருகிறாராம் சூர்யா. சூர்யாவோடு முதன்முதலில் கூட்டணியில் இணைய உள்ள சிறுத்தை சிவா, சூர்யா தன் இயக்கத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகத்தில் உள்ளாராம்.

அதேபோல சூர்யாவும், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிப்பதில் பெருமளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தல அஜித்தின் கூட்டணியில் எப்போது மீண்டும் படம் இயக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

தல அஜித் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல 62 திரைப்படத்திலும், மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச் வினோத்தின் கூட்டணியில் தளபதி 61 திரைப்படங்களில் ஏற்கனவே நடிப்பதாக கமிட்டாகி விட்டார்.

இதனிடையே சிறுத்தை சிவாவின் கூட்டணியில் தல அஜித் எப்போது நடிப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சிறுத்தை சிவா, இந்த கேள்விக்கு பதிலை என் வாயால் சொன்னால் நன்றாக இருக்காது. தல அஜித் வாயிலிருந்து கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஜாடை மாடையாக தல அஜித்தோடு கூட்டணியில் இணைய போவதை சிறுத்தை சிவா தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் தற்போது வெளிவந்த மிகப்பெரிய திரைப்படங்கள் எல்லாம் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் எப்படியாவது ஒரு திரைப்படம் ஆவது பிளாக்பஸ்டர் ஹீட் கொடுக்காத என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சிறுத்தை சிவா மீண்டும் தலயுடன் சேர்ந்து ஐந்தாவது முறையாக ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தால் தமிழ் சினிமாவையே மீண்டும் டாப் பொசிஷனுக்கு கொண்டு வந்துவிடலாம் என திரைத்துறை வட்டாரத்தில் உளள விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending News