வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

16 வருடங்கள் ஏஆர் ரஹ்மானுடன் இணையாத அஜித்.. காரணமான யுவன் ஷங்கர் ராஜா

நடிகர் அஜித் பல சென்டிமென்ட் கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே.உதாரணமாக ஒரே இயக்குனரோடு பல திரைப்படங்களில் இணைந்து நடிப்பது,வி சென்டிமென்டில் படத்தின் டைட்டிலை வைப்பது என நடிகர் அஜித்தின் சென்டிமென்டுக்கு அளவே இருக்காது.

அந்த வகையில் இயக்குனர் ஹெச்.வினோத்,போனிகபூர்,யுவன் சங்கர் ராஜா என இவர்கள் மூவருடனும் மூன்று திரைப்படங்களில் அஜித் கைகோர்த்து நடித்துள்ளார். அதுபோலவே, வி சென்டிமென்டில் உருவான வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களை இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்து இருந்தார்.

Also read: அஜித் முன் திமிராக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தராமல் துரத்தி விட்ட சம்பவம்

இதனிடையே நடிகர் அஜித்தின் பல திரைப்படங்களுக்கு பல இசையமைப்பாளர்கள் வேலை செய்த போதிலும், யுவன் சங்கர் ராஜா,அஜித்தின் திரைப்படத்திற்கு அதிகமாக இசையமைத்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா,அஜித்தின் தீனா திரைப்படத்தில் தான் முதன்முறையாக கைக்கோர்த்தார். அத்திரைப்படம் வெளியாகி, பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டது.

அதைத்தொடர்ந்து மங்காத்தா, பில்லா, பில்லா 2 சமீபத்தில் வெளியான வலிமை உள்ளிட்ட அனைத்து அஜித்தின் திரைப்படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இணைந்து பவித்ரா, வரலாறு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் மட்டுமே அஜித் இணைந்துள்ளார்.

Also read: மீண்டும் வேகமெடுக்கும் ஏகே 61.. பம்பரமாக சுழன்று நடிக்க போகும் அஜித்

கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகியும் இன்று வரை ஏ.ஆர் .ஹ்மானுடன் அஜித் இணையாத காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாக ஏ ஆர் ரஹ்மான் தமிழையும் தாண்டி ஹிந்தி உள்ளிட்ட வேறு சில மொழிகளில் அதிக படங்களில் இசையமைப்பதில் பிஸியாக இருப்பார்.

இதனிடையே நடிகர் அஜித்தும் ஏ.ஆர்.ரஹ்மானை அதிகமாக தொந்தரவு செய்யும் வகையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே அவரது படத்தில் கமிட்டாக்கமாட்டாராம். இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா அஜித்திற்கு ராசி என்பதால் அவரையே அதிக திரைப்படங்களில் அஜித் கமிட்டாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதான்.. அதிரடியாக வெளிவர உள்ள ஏகே 61 மாஸ் அப்டேட்

Trending News