Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விஸ்வாசத்தின் 7 நாள் வசூலை 4 நாட்களில் முறியடித்த வலிமை.. இத்தனை கோடியா?

அஜித் நடிப்பில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த படம் வலிமை. இப்படத்தை ஹெச் வினோத் இயக்கி, போனிகபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு இதே கூட்டணி இணைந்துள்ளதால் வலிமை படத்தின் […]

அஜித் நடிப்பில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த படம் வலிமை. இப்படத்தை ஹெச் வினோத் இயக்கி, போனிகபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு இதே கூட்டணி இணைந்துள்ளதால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து.

வலிமை படத்தின் போஸ்டர், ட்ரெய்லர், டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அஜித்தின் படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு வலிமை படம் வெளியானது மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

வலிமை படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் 36 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதன் பிறகு இப்படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து இருந்தது.

இதனால் வலிமை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

வலிமை படம் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் முந்தைய படங்களை விட வலிமை படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அஜித்தின் விஸ்வாசம் படம் 7 நாட்களில் 125 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது வலிமை படம் நான்கு நாட்களிலேயே 180 கோடி வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் இடையே மிகுந்த உற்சாகம் அடைய செய்துள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.