ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளியாகி ரசிகர்களின் பசிக்கு தீனி போட வந்த படம்தான் வலிமை. என்னதான் படத்தை ஹாலிவுட் ரேஞ்சில் எடுத்து வைத்திருந்தாலும் திரைக்கதை சரியில்லாமல் போனதால் படத்தை முழுவதுமாக அமர்ந்து பார்க்கும் அளவிற்கு எவருக்கும் பொறுமை இல்லை என்று சொல்லும் அளவிற்கு வலிமை படத்தின் ரிவியூ வந்து கொண்டிருக்கிறது. ரிலீஸ் அன்று, இந்த நேரத்தில் வலிமை படம் திரையிடப்படும் திரையரங்குகளின் வாசலில் அஜித் ரசிகர்கள் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அப்படி அவர்கள் செய்த சேட்டையால் சென்னையின் பல திரையரங்குகளின் வாசலில் வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு சென்னையின் முக்கிய சாலைகளை திணறடித்தனர். அப்படி பல திரையரங்குகளில் எல்லை மீறி நடந்து கொண்ட அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும் திணறிப் போனது. இந்த சமயத்தில் அஜித்தின் வலிமை படத்தை பார்ப்பதற்காக அவரது மனைவி நடிகை ஷாலினி எப்பொழுதுமே சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் வந்து தான் அஜித்தின் புதிய படங்களை பார்த்து செல்வார்.
அஜித்தும் எப்பொழுதும் ஆல்பர்ட் தியேட்டரில் தான் படம் பார்ப்பார் . ஆனால் இந்த முறை ஷாலினி கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் வந்து அஜித்தின் வலிமை படத்தை பார்த்து செல்லலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறார். சென்னையில் உள்ள திரையரங்குகளில் அதிகமாக அஜித்தின் வலிமை படத்திற்காக கொண்டாடி தீர்த்த ஒரு திரையரங்கம் என்றால் அது கண்டிப்பாக கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் தான்.
ரசிகர்களின் சேட்டைகள் எல்லை மீறி போனதும் அங்கு தான். சாலைகளில் செல்ல கூடிய வாகனங்களை நிறுத்தி அதன் மேல் ஏறி டான்ஸ் ஆடிக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான பல வேலைகளை செய்து வந்தனர் அஜித் ரசிகர்கள். அப்படி இருக்கையில் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வந்து இருக்கின்றார். அவரை பார்த்த ரசிகர்கள் அவரது கார் முழுக்க பாலாபிஷேகம் , தயிர் அபிஷேகம் என செய்து மாலை போட்டு ஒரு வழியாக்கி விட்டனர்.
இதில் மிரண்டுபோன போனிகபூர் விட்டால் போதும் என்று தெறித்து உள்ளே ஓடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் போனி கபூரின் கார் கண்ணாடி உடையும் அளவிற்கு அஜித் ரசிகர்களின் அட்டகாசம் அதிகரித்து இருக்கிறது. இதனைக் கேள்விப்பட்ட ஷாலினி கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க யோசித்த தனது ஆசையை மாற்றிக்கொண்டு வேண்டவே வேண்டாம் என திரையரங்கு அருகில் வந்தும், பதறிப் போய் திரும்பவும் வீட்டுக்கு ஓடி விட்டார்.
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடந்த கூத்துதான் இது. அங்கு இருக்கக்கூடிய காவலர்கள் எவ்வளவோ முயன்றும் ரசிகர்கள் செய்த அலப்பறையை தாங்கமுடியவில்லை. அவர்கள் செய்த ஆரவாரத்தால் இரவு முழுக்க அந்தப் பகுதி முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது. அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தான் அரசுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆடிய ஆட்டம் அளவுக்கு மிஞ்சி இருந்தது. ஒருவேளை அஜித்தின் மனைவி ஷாலினி வந்து இருந்தாலும் அவரின் கதி அதோகதிதான்.