வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஆளே மாறி போய் காதில் கடுக்கனுடன் குடுப்பத்துடன் வந்த அஜித்.. தீயாக பரவும் அடுத்த படத்தின் நியூ லுக்!

அஜீத் நடிப்பில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களைபெற்றுள்ளது. இப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்குமார் எச் வினோத்துடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினைப் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நேற்று அஜித்தின் மகன் பிறந்தநாள் குடும்பத்துடன் அஜித்குமார் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

ajith kumar shalini
ajith kumar shalini

அந்த புகைப்படத்தில் அஜித்குமார் காதில் கடுக்கன் போட்டபடி புதிய கெட்டப்பில் உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் அஜித்குமார் ஷாலினி அவரது மகள் மற்றும் ஆத்விக் குமார் உட்பட அனைவரும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு அஜித் குமாரின் குடும்ப புகைப்படம் வெளியாகி உள்ளதால் அஜித் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

ajith kumar shalini
ajith kumar shalini

மேலும் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தினைப் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் இந்த படத்தில் எந்தெந்த நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அதனால் கூடிய விரைவில்ஏகே 61 படத்தினைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

ajith kumar
ajith kumar

Trending News