வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அஜித்க்கு வலை விரித்த 5 டாப் நடிகைகள்.. ச்சீ! ச்சீ! என துரத்தி முரட்டு சிங்கிளாக வாழ்ந்த காதல் மன்னன்

இன்று தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக இருக்கக்கூடிய அஜித்குமார் ஒரு காலத்தில் பெண்களின் மனதைக் கவரக்கூடிய காதல் மன்னனாக இருந்தார். என்னப்பா இவரு எப்படி இருக்காரு என்று பெண்கள் நிதமும் அவரை கண்டு உருகும் வகையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். அஜித்குமார் ரசிகைகளே அவருக்கு காதல் வலை வீசும் போது அவருடன் நடித்த, பல நடிகைகள் சும்மா இருப்பார்களா அதில் பல நடிகர்கள் அஜித்திற்கு வலைவிரித்து இருக்கின்றனர்.

ஆனால், அஜித் யார் வலையிலும் சிக்காமல் அவரே தூண்டில் போட்டு ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு வலைவிரித்த நடிகைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சங்கவி: அஜித்தின் முதல் ஹீரோயினான சங்கவி அமராவதி படத்தில் அஜித்தோடு இணைந்து நடித்து, பின்னர் அஜித்தின் காதலி சங்கவிதான் என்று பேசுமளவிற்கு இருவரும் நெருக்கமானார்கள். நெருக்கமாக நடித்தாலும், அஜித்தின் மீது சங்கவிக்கு ஏற்பட்ட காதலாலும் இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. அஜித் இதற்கு சரியாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததாலும், அதன் பின் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதாலும் அந்த காதல் அங்கேயே முடிந்து விட்டது. அதன் பின் சங்கவி நடிகர் விஜய்யோடு சேர்த்து வைத்து பேசி கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரா: நடிகர் அஜித் தொடரும் படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது, நடிகை ஹீரா அந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் கதையை பொறுத்தவரை, ஹீராதான் அஜித்தை துரத்தி துரத்தி,காதலிப்பது போல இருக்கும். ஆனால் உண்மையில் அஜித் தான் அவர் பின்னாடி காதலிப்பதாக கூறி அலைந்தார். மேலும், அப்போதே ஹீரோவிற்கு 10 லவ் லெட்டரை எழுதினார். ஆனால், அவர்களது காதலுக்கு ஹீராவின் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை.

ஸ்வாதி: இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு அஜித் கதாநாயகனாகவும், ஸ்வாதி கதாநாயகியாகவும் நடித்து வெளியான திரைப்படம் தான் வான்மதி. இந்த படத்தில் நடிக்கும் போதே, நடிகர் அஜித் நடிகை ஸ்வாதிக்கு, ரொம்ப அதிகமாக சப்போர்ட் செய்வாராம். அப்படி இருக்கையில், இவருக்கும் அஜித்துக்கும் இடையே காதல் மலர்ந்ததாக ஊடகத்தில் செய்திகள் வெளியானது. அதனை வெளிப்படையாக நடிகை ஸ்வாதி பத்திரிக்கைகளிலும் சொல்லி அதிர வைத்தார்.

லைலா: நடிகை லைலா அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தீனா. இந்த படத்தில் நடித்த லைலா பின்னாளில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அஜித் தான் தனது கிரஸ் என்றும், அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். அஜித் குமாருக்கு இவர் போட்ட காதல் வலைதான் இது என அந்த சமயத்தில் கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்தது. ஆனால், இது காற்றில் வந்த வதந்தியாக கடந்து விட்டது.

மீனா: அஜித்தும் மீனாவும் பல படங்களில் இணைந்து நடித்து இருக்கின்றனர். அந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில், மீனாவுக்கு எப்போதும் அஜித் மீது ஒரு கண் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித்தும் மீனாவும் படப்பிடிப்பு தளங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, பேசுவது என நாட்கள் சென்று கொண்டு இருந்தது. இது கிசு கிசு வாக மாறுவதை உணர்ந்த இவர்கள் இருவரும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விலகி பின் பேசுவதையே குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது சமீபத்தில் மீனா அளித்த பேட்டியில் கூட, அஜித் தான் எப்போதும் என் ஆளு என்று கூறி இருக்கிறார்.

Trending News